13.12.2024 சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈட்டுப்பட்ட இளைஞரைக் கைது செய்து சிரையில் அடைத்தப் காவல்துறை. சிறுமிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு விதத்திலிருந்து பாலியல் சீண்டல் அதிகரித்து வருவதாக இந்த வருடம் அதிக புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர்ப் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் அப்பகுதியில் வசித்து வரும் தன் நண்பர் வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இளைஞரின் செயலை சைகை மூலம் காட்டி வெளிப்படுத்தி தாயாருக்குச் சிறுமி அவரது சில்மிஷ செயலை அறிகுறி காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வங்கி ஊழியரின் பாலியல் சீண்டல்களை சைகைக்காட்டி தன் தாயாரிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.
சிறுமியின் தாயார் உடனே தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
தண்டையார்பேட்டை காவல்துறை புகாரைத் தொடர்ந்து அப்பகுதி சென்று தனியார் வங்கி ஊழியரைப் பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வாய் பேச இயலாத சிறுமிகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மக்கள் ஏராளமான புகார் அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment