FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, January 14, 2025

தேசிய ‘ஸ்ட்ரென்த் லிப்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டி! தங்கம் வென்ற தூத்துக்குடி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி!


12.01.2025
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டியில் பிறவியில் வாய் பேச முடியாத தூத்துக்குடி மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெண்கலம் வென்று சாதனை தூத்துக்குடி வந்த அவருக்கு சக வீரர்கள் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய அளவில் ஹரியானா ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், உடல் வலிமையை நிரூபிக்கும் 34வது தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் கடந்த 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.

போட்டிகள், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி:

இதில், தமிழ்நாடு ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், 32 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அனைத்து போட்டிகளின் முடிவில், தமிழக வீரர் வீராங்கனையர்கள் 13 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதில், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாற்றுத்திறனாளி (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) மாணவி பிரித்தி சிவ பிச்சம்மாள் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என மூன்று சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி வருகை தந்த அவருக்கு சக வீரர்கள், உடற் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவரை வாழ்த்தி கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து அவரது பயிற்றுனர் வைரவேல், பிரித்தி சிவபிச்சம்மாள் ஸ்பெஷல் சைல்ட் (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) எனக் கூறிய அவர், ஏற்கனவே தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், குறைந்த காலத்தில் மீண்டும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். பயின்றார்.

பவர் லிப்டிங் போட்டியில் சவுத் இந்தியா, கோவாவில் நடந்த தேசிய போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற நிலையில், தேசிய அளவில் ஹரியானாவில் ஜனவரி 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற ஸ்ட்ரென்ட் லிப்ட்' போட்டியில் ஜூனியர் சீனியர் பிரிவில் பங்கு பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களும் பெஞ்ச் பிரஸ் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் 3 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் வெற்றி பெற்றதால் அடுத்து இலங்கையில் உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் பல்வேறு பவர் லிப்டிங் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார் என்றார். ஆணுக்கு நிகராக இந்த வாய் பேச முடியாத பிரித்தி சிவ பிச்சம்மாள் திகழ்வதாக குறிப்பிட்டார்.

மே மாதம் மகாராஷ்டிராவில் நடைபெறும் நேஷனல் பவர் லிப்டிங் போட்டியிலும் இவர் தேர்வாகியுள்ளார். அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெறும் பெடரேசன் கேம்ஸ் போட்டியிலும், அடுத்து 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள ஏசியன் கேம்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment