FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 25, 2014

தர்மபுரியில் முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகள்

25.02.2014 தர்மபுரி,
முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் நடந்த விழாவில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.

பிறந்தநாள்விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாள ருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை யொட்டி அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார் கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி 4-ரோடு அண்ணா சிலை அருகே இளைஞர் பாசறை சார்பில் நடந்த விழாவிற்கு பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு 66 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து தர்ம புரி அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நடை பெற்றது. முன் னாள் மாவட்ட பால்வளத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங் கினார். விழாவில் அமைச்சர் பி.பழனியப் பன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், பயண பைகள், எழுது பொருட் கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார்.

பொதுக்கூட்டம்

இந்த நிகழ்ச்சிகளில் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகன், ஒன்றிய செயலாளர் கோவிந்த சாமி, பூக்கடை முனுசாமி, முன்னாள் நகரசெயலாளர் ரவி உள் ளிட்ட கட்சி நிர்வாகி கள், சார்பு அமைப்பு பொறுப் பாளர்கள் கலந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் செங்கை அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக வண்ணை நித்ய ராசன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Daily Thanthi.

மாற்றுத்திறனாளிகளுக்குசட்டப்பூர்வ காப்பாளர்

Wednesday, February 19, 2014

விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை

18.02.2014 மதுரை, :
மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி 3 நாள் மதுரையில் நடந்தது. கைகால் பாதித்தவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூர் வீரர் முரளிதாஸ் முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் திருவண்ணாமலை வீரர் சிவகிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் தஞ்சை மணிவேல், கூடைப்பந்து போட்டியில் மதுரை அந்தோணி மற்றும் வீல்சேர் போட்டியில் நெல்லை கோவிந்தன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சை கிரிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் கீர்த்திகா, நீளம் தாண்டுதலில் தஞ்சை வீரலட்சுமி, கூடைப்பந்து போட்டியில் நாமக்கல் பாவை, வீல்சேர் பிரிவில் நெல்லை சுப்புலட்சுமி முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Thanks to Dinakaran

Thursday, February 13, 2014

பார்வையற்றோரை வஞ்சிக்காதீர்கள்- மனோகரன்

13.02.2014,
இந்தியா முழுக்கச் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 17 லட்சம் பேர் என்கிறது ஒரு கணக்கீடு. இன்னொரு கணக்கீடு, 22 லட்சம் என்கிறது. அதில் ஒன்பதரை லட்சம் பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். 1970-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் தேசியப் பாதுகாப்புப் பார்வையற்றோர் இணையத்தில் மட்டும், நாடு முழுக்க 50 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் ஏழாயிரம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமீபத்தில் நமது நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகள் வரைவு மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க எங்கள் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கிற மாதிரியான குளறுபடிகளை உள்ளடக்கியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யுமாறு தொடர்ந்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்திவந்தோம். உதாரணமாக, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்படும் வகையில் சட்டம் உள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், இந்த மசோதாவில் 10 ஆண்டுகளாக இருந்ததை 5 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்கள். ஏற்கெனவே, மாற்றுத் திறனாளிகள் பன்மடங்கு வேலைவாய்ப்புப் பெறாமல் இருக்கும் நிலையில், அவர்களை மேலும் வேலையில்லாதவர்களாக ஆக்கும் முயற்சியே இது. அதேசமயம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே இருந்த 3% இட ஒதுக்கீட்டை 6%-ஆக ஆக்குமாறு கேட்டிருந்தோம். இந்த மசோதாவில் 5% ஆக ஆக்கப்பட்டிருக்கிறது. அதில் முழுமையாகப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும், ஓரளவு பார்வை தெரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும் பிரித்து உள்ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் ஆணையம்
முந்தைய சட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு இருந்ததையே இப்படிப் பிரித்துப் போட்டிருப்பது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வஞ்சிப்பதாகும். மாற்றுத் திறனாளிகளின் முறையீடுகளைக் கேட்கவும், பேசவும் பிரச்சினைகளை அரசின் முன் வைக்கவும் மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைப்பதாக அதில் உள்ளது. ஒரு மகளிர் ஆணையம் என்றாலோ, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்றாலோ மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்டோரில் ஒருவரைத்தான் ஆணையராக நியமிப்பது வழக்கம்.

அதுபோல மாற்றுத் திறனாளி ஆணையத்தின் ஆணையராக மாற்றுத் திறனாளி ஒருவரையே நியமிக்கச் சட்டத்தில் வழிவகைசெய்யக் கேட்டிருந்தோம். அதைச் செய்யவில்லை. இப்படி இந்த மசோதாவில் உள்ள 20 அம்ச சட்டத்திருத்தங்களும் ஏகப்பட்ட குளறுபடிகளுடன்தான் இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் சீர்செய்யாமல் சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று சட்ட அமைச்சர் கபில் சிபலைச் சந்தித்தோம். ரயில்வே மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனைப் பார்த்துப் பேசினோம். எங்கள் திருத்தங்களை அவர்களிடம் மனுவாகக் கொடுத்தோம்.

ஆனால், அவர்களோ கொண்டுவந்திருக்கும் சட்டமசோதவை அப்படியே சட்டமாக்க முடிவு செய்து உள்ளார்கள். மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் போதிய அனுபவம் இல்லாத, மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள் கமிட்டியில் இடம்பெற்றுத்தான் மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்துகொள்ளாத இத்தகைய ஒரு சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியிருக்க முடியும். எங்கள் பொதுச்செயலாளர் எஸ்.கே. ரூட்டா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிதான். அவரைப் போல் முதிர்ச்சியுள்ள மூத்த மாற்றுத் திறனாளிகள் எத்தனையோ பேர் நாட்டில் உள்ளனர். அவர்களையெல்லாம் கலந்தாலோசித்து வரைவு மசோதா தயாரித்திருந்தால், இந்தப் பிரச்சினையே வந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் சொல்லியாக வேண்டும்

எனவே, எங்களுக்கு எதிரான இந்த மசோதாவை எங்கள் எதிர்ப்பை மீறியும் சட்டமாக்கினால், நாங்கள் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இதுவரை நாங்கள் எந்த இடத்திலும் அரசியல்ரீதியாக ஒன்றுசேர்ந்ததில்லை. அரசியல் கண்ணோட்டத்தோடு பிரச்சாரமும் செய்ததுமில்லை. ஆனால், இந்த முறை நாடு முழுக்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அதேபோல் 18 வயது எட்டியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு ரூ.1,000 உதவித்தொகை வழங்கிவருகிறது. என்ன காரணமோ, நான்கு மாதங்களாக இந்த உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி யாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
Thanks to

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒன்றுபடுங்கள்


நாட்டில் உள்ள இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இந்தத் தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது. ஊனம் என்பதற்கு இந்த மசோதாவில் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. உடல், மனம், உணர்வு, அறிவார்ந்த செயல்கள் போன்றவைரீதியாக ஏற்படும் அனைத்து வகை ஊனங்களும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. சாதாரண உடல்நிலை, மனநிலையுள்ள மற்றவர்களுடன் கலந்து பழக முடியாமலும், பணியாற்ற முடியாமலும் உள்ள சூழல்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குச் சலுகைகளைத் தர இந்த மசோதா வழிசெய்கிறது. இதுவரை ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டு அளவையும் மூன்று சதவீதத்திலிருந்து ஒன்பது சதவீதமாக இந்த மசோதா உயர்த்துகிறது. 19 விதமான ஊனங்கள் பட்டியலிடப்பட்டு அத்தகையவர்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு அளிக்கிறது மசோதா. 1995-ல் இயற்றப்பட்ட சட்டத்தில், மொத்தம் ஏழு மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தன.

மூளைவளர்ச்சிக் குன்றியவர்களுக்கும் பிறருக்குச் சமமான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது இந்த மசோதா. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஊனமுற்றோரின் எண்ணிக்கை, ஊனத்தின் தன்மை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலான அரசு முன்முயற்சி எடுத்தது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் விடுபட்டுப்போன இந்தப் புள்ளிவிவரம் கிடைக்க இந்த யோசனைதான் வழிசெய்திருக்கிறது.

ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் குடும்பத்திலும் உறவினர் களிலும் ஒருசிலர்தான் ஆதரவாக இருக்கின்றனர். ஊனம் காரண மாகவே படிக்க முடியாமல் பெரும்பாலானோர் படிப்பைப் பாதியில் கைவிடுகின்றனர் அல்லது உயர் கல்வி பெறாமல் தடுக்கப்படுகின்றனர். தனியார் நிறுவனங்களும் ஊனமுற்றவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக வேலை செய்ய முடியாது என்ற காரணத்தைக் காட்டி, வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயங்கி, மறுத்துவிடுகின்றன. சுய வேலைவாய்ப்புகளும் அவர்களுக்குக் குறைவே. இந்தக் காரணங் களால் ஊனமுற்றவர்கள் அடுத்தவர்களை அண்டிதான் காலம் முழுக்க வாழ வேண்டியிருக்கிறது. இந்த மசோதா சட்டமானாலும் இவர்களுடைய வாழ்க்கை நிலை அடியோடு மாறிவிடாது என்றாலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்தக் காரணத்துக்காகவாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மோதல் போக்குகளைக் கைவிட்டு, மசோதாவை முழுமனதுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும் தாமதப்படுத்துவது சரியல்ல என்பதை எல்லாக் கட்சிகளும் உணர வேண்டும்.

சில குறைகள் இருக்கலாம், இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டியிருக்கலாம், புதிதாகச் சிலவற்றைச் சேர்க்க வேண்டியிருக்கலாம். எதுவாக இருந்தாலும், முதலில் மசோதாவை நிறைவேற்றிவிட்டுத் தேவைப்பட்டால் திருத்தங்களை வரும் நாடாளுமன்றக் கூட்டங்களில் கொண்டுவரலாம். இந்த மசோதாவைக் கொண்டுவந்த ஐ.மு. கூட்டணிக் கட்சிகளும் தே. ஜ. கூட்டணிக் கட்சிகளும் முற்போக்கான - மனிதநேயமுள்ள மசோதாக்களை ஆதரிக்கத் தயக்கம் காட்டாத இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

Thanks to The Hindu.

Wednesday, February 12, 2014

தையல் இயந்திரம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

12.02.2014 கரூர், :
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தையல் பயின்றதற்கான சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் போட்டோ ஒன்று ஆகிய சான்றிதழ்களுடன் கரூர் கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளத்தில் அறை எண் 7ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்று கரூர் கலெக்டர் ஜெயந்தி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Thanks to Dinakaran

மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் தொடர்பான வழக்கு: விளக்கம் அளிக்க தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

சென்னை, 12 February 2014

அரசின் பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அரசு அதிகாரிகள் அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: அரசுத் துறை பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, அரசு துறைகள், பொதுத் துறைகள், அரசு நிர்வகிக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி, பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தப் பணியிடங்களை கண்டறிவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதன் பிறகு, இந்தப் பணியிடங்களை கண்டறிவதற்காக மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் 34 செயலக தலைவர்கள், 140 துறை தலைவர்கள், 102 அரசு பொதுத்துறை பணியிடங்கள், 54 அரசு நிறுவனங்களில் பதவிகள் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் கண்டறியப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கான எந்த ஒரு தெளிவான தகவலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிர்வகிக்கும் 54 நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை.

அதனால் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் பி.சிவசங்கரன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இதற்கான நோட்டீûஸ பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to

ACTIVISTS SAY DISABILITY RIGHTS BILL NOT GIVEN ENOUGH IMPORTANCE

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

11.02.2014 திருச்சி,
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பெண் கற்பழிப்பு
திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் திலகவதி (வயது24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதே பகுதியை சேர்ந்தவர் பட்டகுமார் என்கிற குமார் (43) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10–9–2012 அன்று வீட்டில் தனியாக இருந்த குமார், திலகவதியை கற்பழித்தார். நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

10 ஆண்டு சிறை
இதுபற்றி திலகவதியின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் குமாரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Thanks to

மாற்றுத் திறனாளிகளுக்கு திருத்தங்களுடன் புதிய மசோதா

புதுடெல்லி, பிப். 11 - மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திருத்தப் பிரதிகள் இணைக்கப் படவில்லை.

இந்நிலையில் 16 திருத்தங் களுடன் மாற்றுத் திறனாளிகள் மசோதாஅறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பழைய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக அந்த அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக 2011 முதல் மாற்றுத் திறனாளிகள் மசோதா வில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி மாற்றுத்திறனாளிகள் திருத்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் தங்களது முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்று கோரி ஜாவித் அபிதி தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய மசோதாவில் 19 விதமான உடல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Thanks to

Monday, February 10, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு: திருத்தங்களுடன் புதிய மசோதா


10.02.2014,
மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திருத்தப் பிரதிகள் இணைக்கப் படவில்லை.

இந்நிலையில் 16 திருத்தங் களுடன் மாற்றுத் திறனாளிகள் மசோதா திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பழைய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக அந்த அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக 2011 முதல் மாற்றுத் திறனாளிகள் மசோதா வில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி மாற்றுத்திறனாளிகள் திருத்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் தங்களது முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்று கோரி ஜாவித் அபிதி தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய மசோதாவில் 19 விதமான உடல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Thanks to

MADURAI DISAB OFFICIAL'S ATTITUDE PUT MENTALLY DISABLED & PARENTS IN BAY

Saturday, February 8, 2014

புதிய மசோதா தாக்கல் வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

08.02.2014, புதுடெல்லி:
தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களால் மாநிலங்களவையில் நேற்று நடந்த அமளிக்கு இடையே, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை சமூக நீதித்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதில், பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாற்று திறனாளிகளுக்கு 7 பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த புதிய மசோதாவின் மூலம் 19 பிரிவுகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதை மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி முடிவு செய்வார் என்று அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
Thanks to Dinakaran

Friday, February 7, 2014

குப்பை பொறுக்குகிறார்... பிளாட்பாரத்தில் தூங்குகிறார்: ஆசிரியர் கனவோடு படித்து சாதிக்கும் மாற்றுதிறனாளி

உடலில் ஊனம் இருக்கலாம். உள்ளம் ஊனப்படாமல் இருந்தால் வானம்கூட வசப்படும் என்று சாதித்து காட்டிய மாற்றுதிறனாளிகள் பலர் இருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் எப்போதும் மாற்றி யோசிக்கக் கூடியவர்கள்தான். எல்லோரையும் போல் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருக்கும். அதே போல்தான் 33 வயது இளைஞர் ஒருவர் ஊனத்தை பெரிது படுத்தாமல், குடும்பத்தில் படிக்க வைக்க வசதியில்லாத சூழ்நிலையிலும் தான் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாளையம் கவுன்டர் குஞ்சாளம்மாள் என்பவரது மகன் பார்த்த சாரதி (33). இவர் பிறந்து 2 வயதிலேயே தந்தை பாளையம் கவுன்டர் இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்தசாரதி 12-ம்வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இளங்கலை பட்டம் பயின்றார். மேலும் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் அதிலும் குறிப்பாக ஆசிரியராக வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம்... கனவு எல்லாம்...

பொருளாதாரம் பொருளாதார வசதி கை கொடுக்காவிட்டாலும் படித்தே தீர வேண்டும் என்ற அவரின் தணியாத தாகம் இப்போது அவரை திருவள்ளூர் அடுத்த திருவூரில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என்ன தான் அரசு பள்ளியாக இருந்தாலும், அவர் தங்குவதற்கும், உண்பதற்கும், உடுத்துவதற்கும் வசதியில்லை.

அதனால் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத் தில் படுத்து உறங்குவதும், காலையில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று படிப்பதும், மாலை வேளைகளில் குப்பைகளை பொறுக்கி அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டு தன் படிப்பை தொடர்கிறார் இந்த பார்த்தசாரதி. படிக்க வேண்டும், கெளரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு உதவத்தான் யாரும் இல்லை. இவரைப் போல சகாதேவன் என்ற மாற்றுத்திறனாளியும் முடிவெட்டி சாதிக்கிறார்.

யாரும் உதவாவிட்டாலும் மற்றவர்களிடம் பிச்சை எடுக்காமல் தன்னாலும் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழும் பார்த்தசாரதி, சகாதேவனின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம். உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் ஊனம் இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே சாட்சி.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை: கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

ஈரோடு, பிப். 6–

ஈரோடு, திண்டல், செங்கோடம்பாளையம், கொங்கு அறிவாலயம், மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 87ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 6 வயதுக்குட்பட்ட 367 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (ஊரகம்) பகுதியில் திண்டல் கொங்கு அறிவாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒரு வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய 30 குழந்தைகளுக்கும்;

சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு சேரன் மண்டல கிருத்துவ சங்கம், கோயமுத்தூர் தொண்டு நிறுவனம் மூலம் 5 செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு தலா 190 கிராம் வீதம் இணை உணவும், மதிய உணவும் ஈரோடு மற்றும் சென்னிமலை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தேவிகுமாரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு ஊரகம்) லதா, கொங்கு அறிவாலயம் முதல்வர் வெங்கடேஸ்வரி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thanks to Maalai Malar.

மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் சலுகை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது

07.02.2014, சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை, இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வினை மனவளர்ச்சி குன்றிய, டிஸ்லெக்சியா குறைபாடுகள் உள்ள மாணவ–மாணவிகளுக்கு தேர்வு எழுத சலுகைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத்தில் வருகிற 3.3.2014 முதல் 25.3.2014 முடிய மேல் நிலைத்தேர்வுகளும், அரசு பொதுதேர்வுகளும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுதேர்வுகள் 26.3.2014 முதல் 9.4.2014 முடியவும் நடைபெற உள்ளது.

மேல்நிலை தேர்வினை 90 தேர்வு மையங்களில் 38 ஆயிரத்து 322 மாணவ, மாணவியர்களும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வினை 133 மையங்களில் 48 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் கண்பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றவர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு போன்ற குறைபாடுகளுடைய மாணவ, மாணவியர்களுக்கு தேர்வின் போது வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்), இணை இயக்குநர் (மருத்துவம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களை இந்த குழு தேர்ந்தெடுத்து, தேர்வுக்கு அனுப்பும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to

கடும் அமளிக்கிடையே மாற்றுத்திறனாளி மசோதா தாக்கல்

 
07.02.2014, புதுடெல்லி:
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கிடையே மசோதாவை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புமாறு மார்க்சிஸ்ட் உறுப்பினர் யெச்சூரி கோரிக்கை விடுத்தார்.

Thursday, February 6, 2014

Delegation of All India Federation of Deaf calls on Hamid Ansari

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு கண்ணில் கறுப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளி நண்பரின் ஓர் ஆதங்கம் !!

கண் தெரியாதவர் – நான்
தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

… காது கேளாதவர் – நான்
ஒட்டு கேட்டதே கிடையாது…

வாய் பேசாதவர் – நான் பொய்
பேசியதே கிடையாது..

குள்ளமானவர் – நான் யார் முன்னும்
தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் – நான் யார்
குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் – நான் காசு பணம்
வந்ததும் கால் மேல் கால்
போடுவது இல்லை…

அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி
என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்..

எங்களால் செய்ய இயலாத செயல்கள்
செய்யும் நீங்க தான் ஊ –!! அந்த
வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்
ஏனென்றால் அந்த வார்த்தையின்
வலி எனக்கு தெரியும் !!

நன்றி
சுகுமார்

நெல்லையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

06.02.2014,
நெல்லை டவுண் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து நாகலட்சுமி – ராஜா மற்றும் தங்கலட்சுமி –முத்துகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் சங்கரசுப்பு தலைமையில் கோட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2 ஜோடிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு 5 கிராம் தங்க தாலியும் மணமகன் –மணமகளுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் 15 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, என சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ரோட்டரி இயக்குனர் பரமசிவன், லக்ஷ்மி திரையரங்கின் மேலாளர்கள் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்களின் உற்றார் உறவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Sathiyam TV

Wednesday, February 5, 2014

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014, ஊட்டி,

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் மாற்றுத்திற னாளிகள் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமை களுக்கான சங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருதி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து அரசு டாக்டர் களிடமும் அடை யாள அட்டை பெற அனுமதி அளிக்க வேண்டும்.

மிகவும் இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அடையாள அட்டை களை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய உதவி தொகையை உடனடி யாக கிடைக்க செய்ய வேண் டும். பொது இடங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என் பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Thanks to Dailythanthi.

அனைத்து மாற்றுத்திறனாளிகள் புதுடில்லியில் ஆர்ப்பாட்டத்தின் படங்கள்







Tuesday, February 4, 2014

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014 திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காளியப் பன், துணைச்செயலாளர் ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். ஊனமுற்றோருக்கு பலனளிக்கும் ஷரத்துத்துக் களை நீக்க கூடாது.

இவற்றை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பைசாஅகமது நன்றி கூறினார்.

Thanks to

மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்


மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

03.02.2014,  Delhi,
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது.

ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

"காலதாமதம்"
இந்த நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வான இந்த அமர்வில் இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் , இந்த மசோதா மீண்டும் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும்.

இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று போராட்டத் தலைவர்கள் கூறினர்.

தற்போதைய நாடாளுமன்றத்தில், சுமார் 126 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. கடந்த சில கூட்டத்தொடர்கள் அரசியல் குழப்பம் காரணமாக முழுமையாக நடக்காமல் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படமுடியவில்லை.

நாட்டில் சுமார் 40லிருந்து 90 மிலியன் பேர் உடல் ஊனம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என்று போராட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுடில்லியில் இந்தியா கேட் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

பல்தரப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வையற்றோர் உட்பட 17 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது இவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும், இவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை இவர்களது போராட்டம் ஓயாது எனவும் முழக்கமிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காது கேளாதோர் அமைப்புக்கான தேசிய தலைவர் சோரின் சின்ஹா, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதற்காக போராடி வருவதாக கூறினார்.

நெடுங்காலமாக தொடரும் இந்த கால தாமதத்திற்கு எதிராகப் போராடிவரும் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைப்பதாகவும், பல்வேறு கட்டங்களிலும் நம்பிக்கை அளித்த மத்திய அரசு, தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிலவும் அமளியை காரணம் காட்டுவது வருத்தம் அளிப்பதாக தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு அமைப்பின் செயலர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஜாவேத் அபிதி இந்த போராட்டம் குறித்து பிபிசியிடம் தெரிவிக்கையில், வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முறை இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் இதற்கான வாய்ப்பை பெற குறைந்தது இரண்டு வருடங்களாவது காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

அதோடு இது குறித்து இவர்களது பிரதிநிதிகள் குழு அனைத்து கட்சி தலைவர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அனைவரும் இவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்பிக்கை கூறியுள்ளதால் இந்த முறை மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்காது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதை மனதில் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
Thanks to

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்கவேண்டும்

03.02.2014 நெல்லை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கங்காதரன் தலைமைதாங்கினார். காதுகேளாதோர் சங்க நிர்வாகி அரசு முத்து முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் நெல்லை மாவட்ட மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ரூ.1000 உதவித் தொகை
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகை கடந்த சில மாதங்களாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை நிலுவையுடன் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to

மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

03.02.2014, திருச்சி:
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதிகிராஃப்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சிவக்குமார், புஷ்பநாதன், சரவணன், அப்துல்கலாம், நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் பல பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, சட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க தகுந்த வரைமுறை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஐந்து பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Thanks to