FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 3, 2014

மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று

03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
  • அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
  • ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
இதுபோல் மத்திய அரசு சாரம் அற்ற ஐ.நா. விதிகளுக்கு மாறாக ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஊனப்படுத்தி உள்ளதை எதிர்த்தும் – ஐ.நா. விதிகள் படி சட்டம் இயற்ற கோரியும் நாடு முழுவதும் இன்று போராட்ட இயக்கங்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியிலும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment