FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 12, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் தொடர்பான வழக்கு: விளக்கம் அளிக்க தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

சென்னை, 12 February 2014

அரசின் பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அரசு அதிகாரிகள் அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: அரசுத் துறை பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, அரசு துறைகள், பொதுத் துறைகள், அரசு நிர்வகிக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி, பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தப் பணியிடங்களை கண்டறிவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதன் பிறகு, இந்தப் பணியிடங்களை கண்டறிவதற்காக மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் 34 செயலக தலைவர்கள், 140 துறை தலைவர்கள், 102 அரசு பொதுத்துறை பணியிடங்கள், 54 அரசு நிறுவனங்களில் பதவிகள் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் கண்டறியப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கான எந்த ஒரு தெளிவான தகவலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிர்வகிக்கும் 54 நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை.

அதனால் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் பி.சிவசங்கரன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இதற்கான நோட்டீûஸ பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment