01.02.2014, புதுச்சேரி
மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 3ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி காது கேளாதோர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.சரவணன், ஜி.பாலமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
கடந்த 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. விதிகளின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தில்லியில் பேரணி நடத்தி, பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் புதிய உரிமைகள் சட்ட நகல் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த 2013 டிசம்பரில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
ஆனால் காரணமின்றி புதிய உரிமைகள் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை பாதிக்கும் வகையில் தற்போது அச்சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஊனமுற்றோரைப் பற்றிய வரையறை பழைய மருத்துவ மாதிரி அடிப்படையிலேயே உள்ளது. இது ஐ.நா. விதிகளுக்கு எதிரானதாகும். அதிக பாதிப்புள்ள பெண்கள், குழந்தைகள் பற்றிய அம்சங்கள் அதில் நீக்கப்பட்டுள்ளன.
3 சதவீத இட ஒதுக்கீடும் வேலைவாய்ப்பில் தரப்படவில்லை. தேசிய மற்றும்
மாநில அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தை மாற்றுத் திறனாளிகள் ஏற்க மாட்டார்கள்.
எனவே உரிய திருத்தங்களோடு சட்ட நகலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நிர்வாகிகள் அபிலா, ஞானவேல், சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Thanks to Dinamani.

No comments:
Post a Comment