FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, February 7, 2014

குப்பை பொறுக்குகிறார்... பிளாட்பாரத்தில் தூங்குகிறார்: ஆசிரியர் கனவோடு படித்து சாதிக்கும் மாற்றுதிறனாளி

உடலில் ஊனம் இருக்கலாம். உள்ளம் ஊனப்படாமல் இருந்தால் வானம்கூட வசப்படும் என்று சாதித்து காட்டிய மாற்றுதிறனாளிகள் பலர் இருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் எப்போதும் மாற்றி யோசிக்கக் கூடியவர்கள்தான். எல்லோரையும் போல் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருக்கும். அதே போல்தான் 33 வயது இளைஞர் ஒருவர் ஊனத்தை பெரிது படுத்தாமல், குடும்பத்தில் படிக்க வைக்க வசதியில்லாத சூழ்நிலையிலும் தான் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாளையம் கவுன்டர் குஞ்சாளம்மாள் என்பவரது மகன் பார்த்த சாரதி (33). இவர் பிறந்து 2 வயதிலேயே தந்தை பாளையம் கவுன்டர் இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்தசாரதி 12-ம்வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இளங்கலை பட்டம் பயின்றார். மேலும் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் அதிலும் குறிப்பாக ஆசிரியராக வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம்... கனவு எல்லாம்...

பொருளாதாரம் பொருளாதார வசதி கை கொடுக்காவிட்டாலும் படித்தே தீர வேண்டும் என்ற அவரின் தணியாத தாகம் இப்போது அவரை திருவள்ளூர் அடுத்த திருவூரில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என்ன தான் அரசு பள்ளியாக இருந்தாலும், அவர் தங்குவதற்கும், உண்பதற்கும், உடுத்துவதற்கும் வசதியில்லை.

அதனால் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத் தில் படுத்து உறங்குவதும், காலையில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று படிப்பதும், மாலை வேளைகளில் குப்பைகளை பொறுக்கி அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டு தன் படிப்பை தொடர்கிறார் இந்த பார்த்தசாரதி. படிக்க வேண்டும், கெளரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு உதவத்தான் யாரும் இல்லை. இவரைப் போல சகாதேவன் என்ற மாற்றுத்திறனாளியும் முடிவெட்டி சாதிக்கிறார்.

யாரும் உதவாவிட்டாலும் மற்றவர்களிடம் பிச்சை எடுக்காமல் தன்னாலும் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழும் பார்த்தசாரதி, சகாதேவனின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம். உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் ஊனம் இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே சாட்சி.

No comments:

Post a Comment