FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 4, 2014

மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

03.02.2014,  Delhi,
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது.

ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

"காலதாமதம்"
இந்த நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வான இந்த அமர்வில் இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் , இந்த மசோதா மீண்டும் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும்.

இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று போராட்டத் தலைவர்கள் கூறினர்.

தற்போதைய நாடாளுமன்றத்தில், சுமார் 126 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. கடந்த சில கூட்டத்தொடர்கள் அரசியல் குழப்பம் காரணமாக முழுமையாக நடக்காமல் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படமுடியவில்லை.

நாட்டில் சுமார் 40லிருந்து 90 மிலியன் பேர் உடல் ஊனம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என்று போராட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுடில்லியில் இந்தியா கேட் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

பல்தரப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வையற்றோர் உட்பட 17 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது இவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும், இவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை இவர்களது போராட்டம் ஓயாது எனவும் முழக்கமிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காது கேளாதோர் அமைப்புக்கான தேசிய தலைவர் சோரின் சின்ஹா, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதற்காக போராடி வருவதாக கூறினார்.

நெடுங்காலமாக தொடரும் இந்த கால தாமதத்திற்கு எதிராகப் போராடிவரும் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைப்பதாகவும், பல்வேறு கட்டங்களிலும் நம்பிக்கை அளித்த மத்திய அரசு, தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிலவும் அமளியை காரணம் காட்டுவது வருத்தம் அளிப்பதாக தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு அமைப்பின் செயலர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஜாவேத் அபிதி இந்த போராட்டம் குறித்து பிபிசியிடம் தெரிவிக்கையில், வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முறை இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் இதற்கான வாய்ப்பை பெற குறைந்தது இரண்டு வருடங்களாவது காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

அதோடு இது குறித்து இவர்களது பிரதிநிதிகள் குழு அனைத்து கட்சி தலைவர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அனைவரும் இவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்பிக்கை கூறியுள்ளதால் இந்த முறை மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்காது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதை மனதில் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
Thanks to

No comments:

Post a Comment