புது தில்லி, 30 June 2015
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

No comments:
Post a Comment