10.06.2015, காரைக்குடி:
காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்கள் யாருமின்றி, ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் பழைய அரசு மருத்துவ மனை அருகில், அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி சார்பில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய நிலவரத்தின் படி 2 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு சமையலர் நியமனம் செய்யப் பட்டனர். தொடர்ந்து நகராட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 2005-ம் ஆண்டு முதல், இப்பள்ளி மாவட்ட சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதிய பணியிடம் நிரப்பப் படாததால், 2006-ம் ஆண்டிலிருந்து விடுதி வசதி நிறுத்தப்பட்டது.
அது முதற்கொண்டு மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் 8 மாணவர்கள், 2013-14-ல் 11 மாணவர்கள், 2014-15-ம் ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. நேற்று பள்ளி தொடங்கிய நிலையில், இதுவரை மாணவர் யாரும் சேராததால், ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது.

No comments:
Post a Comment