05.06.2015,
நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று முதன்மை தேர்வை எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒருமணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரி.பரந்தாமன், கடந்த 1993-ஆம் ஆண்டு மாநில சமூக நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முன்னதாக மனுதாரர் ரமேஷ் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் மூலம் தேர்வு எழுதும் வேளையில் கூடுதலாக வழங்கப்படும் அரைமணி நேரம் போதவில்லை என்றும், இதனை ஒருமணி நேரமாக அதிகரித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார்.

No comments:
Post a Comment