FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

No comments:

Post a Comment