FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 26, 2015

அரசு காதுகேளாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

26.06.2015, காஞ்சிபுரம் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் சார்பில், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய நகரங்களில் மேல்நிலைப் பள்ளிகளும், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, ஊட்டி ஆகிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளிகளாகவும், தாம்பரம், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் நடுநிலைப் பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, ஆதரவற்ற செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 1975-ஆம் ஆண்டு தாமல்வார் தெருவில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 2004-ஆம் ஆண்டு முதல் சதாவரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு முன்பருவ பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 52 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 4 ஜோடி விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளும், விடுதி மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் 2 ஜோடி விலையில்லா சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

தருமபுரி, தஞ்சாவூரில்தான் மேல்நிலைக் கல்வி!
இந்த நிலையில், இங்கு 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வியைத் தொடர வேண்டுமானால் தஞ்சாவூர் அல்லது தருமபுரியில் இயங்கும் காதுகேளாதோர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராமாபுரம் எம்ஜிஆர் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதோடு, கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் மேல்நிலைக் கல்வியைத் தொடருவதில்லை.

தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்!

இதனால், இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து இந்தப் பள்ளியின் மாணவர்களின் தந்தை எம்.ஆறுமுகம் கூறியதாவது:

இந்தப் பள்ளியில் எனது முதல் குழந்தை 5-ஆம் வகுப்பும், 2-வது குழந்தை 2-வது வகுப்பு படித்து வருகின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் சிறப்பாக உள்ளது. ஆனால் 10-ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் நிலைதான் உள்ளது.

அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்றால், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

12-ஆம் வகுப்புக்கு பிறகு இந்த மாணவர்களுக்கென தனிக் கல்லூரி இல்லை. காதுகேளாதோர் பள்ளிகளில் உடற்கல்விக்காகத் தனி ஆசிரியர்கள் இல்லை. எனவே உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணியிடத்தையும் நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment