FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, June 17, 2015

இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை,17 June 2015
இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரத்தை கீதா பவன் அறக்கட்டளை இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. இந்த, சுயம்வரத்தில் கலந்து காùள்ள ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இயக்குநர் அசோக்குமார் கோயல் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் 248 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அறக்கட்டளையின் விதிமுறைப்படியும், சட்டத்தின் படியும் திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது.

22 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றாலும், திருமணம் புரிவதற்கான சூழல் 20 சதவீதமே உள்ளது. ஆகவே, மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பிறகு, சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதில், பிரிவு, மதம் ஆகியவை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசமாக நடத்தப்படுகிறது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் கூறியது: திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளிகள், மனைவியை இழந்தவர், விவாகரத்தானவர், விதவை உள்ளிட்டோர் அறக்கட்டளையின் சார்பில் மாவட்டந்தோறும் நடக்கும் சுயம்வரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். போலியோவினால் ஊனமுற்றவர், பிறவி ஊனம், வாய்பேச முடியாதோர், தவழ்ந்து செய்வோர், விபத்தினால் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண் மாற்றுத்திறனாளி 45 வயதிற்குள்ளும், பெண் மாற்றுத்திறனாளி 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பிறகு, தகுதி, விருப்பத்தின் அடிப்படையில் விரும்பிய மாற்றுத்திறனாளியை தேர்வு செய்து முழு சம்மதத்துடன் திருமணங்கள் நடத்தப்பட உள்ளது.

இத்திருமணங்கள் இந்து முறைப்படி, அரசு திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதுவரை 198 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளது. இது பாúன்ற திருமணங்களால் மாற்றுத்திறனாளிகளின் மீதுள்ள சமூக பார்வை மாறிவருகிறது.

விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, 334, அவ்வைசண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை -86 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் சுயம்வரம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை (ஆக.23) - 94451 98100, விழுப்புரம் (ஜூலை 19) -98947 26726, திருவாரூர் (ஜூலை 26) - 94867 41985, மதுரை (ஆக.9) - 96004 50676, ஈரோடு (ஆக.16) - 80129 50771 ஆகிய மாவட்டங்களில், குறிப்பிட்ட நாளிலும், எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment