FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, June 15, 2015

பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment