09.06.2015, பவானி:
ஈரோடு மாவட்டம் அருகே பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 4 வயது ஆண் குழந்தை அங்கு சுற்றி திரிந்தது.யாரும் கண்டுகொள்ளாத அந்த குழந்தையை கண்டறிந்த சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேஷாக், குழந்தை யாருடையது என விசாரித்துள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஆனால் குழந்தை தவித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பையும், அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது.
அதில், இந்த குழந்தைக்கு காது கேட்காது, வாய் பேசாது மற்றும் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றும் நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் இந்த குழந்தையை எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீசார் ஆர்.என்.புதூர் சி.எம். நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளி குழந்தையை பரிதாவமாக தவிக்க விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment