மத்திய அரசின் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள். |
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையம், சென்னை, கிண்டியில் உள்ளது; இது, 1979ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், 'எல்.சி., புராஜக்ட்' நாகப்பட்டினம் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது.
மறுவாழ்வு மைய வளாகத்தில் நடந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 200 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மைய இணை இயக்குனர் தங்கராஜ், எல்.சி., புராஜக்ட் திட்ட இயக்குனர் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment