FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, June 26, 2015

பிறவியிலேயே காது கேளாத, வாய்பேசாத 3 குழந்தைகளுக்கு நவீன ஆபரேஷன்.. அரசு டாக்டர்கள் சாதனை

26.06.2015. கன்னியாகுமரி: 
பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 3 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்‘ என்கிற நவீன அறுவை சிகிச்சை செய்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். குமரி மாவட்டம் கடையல் பகுதியைச் சேர்ந்த அல்சாத் மகன் அமீர் (இரண்டரை வயது), புத்தன்துறையைச் சேர்ந்த மணிகண்டன் மகள் நிஷாந்தினி (மூன்றரை), குளச்சலைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் ரித்திஷ் சான்டரினோ (மூன்றரை). இந்த மூன்று குழந்தைகளுக்கும் பிறவியிலேயே காது கேளாமை, வாய்பேச முடியாமை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்க அதிகப் பணம் செலவாகும் என எண்ணி அவர்களது பெற்றோர் அப்படியே விட்டு விட்டனர். இந்நிலையில், அரசின் சலுகையைப் பெறுவதற்காக இம்மூன்று குழந்தைகளின் பெற்றோரும் மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு இக்குழந்தைகளைச் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சை மூலம் மீண்டும் அக்குழந்தைகளுக்கு காது கேட்கும் சக்தி மற்றும் வாய்ப்பேசும் சக்தியைப் பெறா முடியும் என பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மூன்று குழந்தைகளுக்கும் "இம்ப்ளான்ட் காக்ளியார்" என்கிற நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் கேட்கும் திறனை முதல்கட்டமாக பெற்றுள்ளனர். வாய் பேசுவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், பேசுவதற்கு காலதாமதம் ஆனாலும் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் மரபு வழியாலும், பேறுகாலத்தின் போது ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் சில நிகழ்வுகளாலும் உள் காது வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கேட்கும் திறன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்படும் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் கருவி பொருத்தி 4 மாதங்கள் கண்காணிக்கப்படும். இதில் சிறிதும் முன்னேற்றம் இல்லாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளான்ட்‘ சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை குமரி மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகளின் பெற்றோர் ‘காக்ளியர் இம்பிளான்ட்‘ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளை அணுகியபோது ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்பதை அறிந்து கவலை அடைந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.8½ லட்சம் செலவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையை, இதற்கு முன்பு சென்னை மற்றும் கோவையிலேயே செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது தென் தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்தில் முதல்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சையை கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் பாரதிமோகன் தலைமையில் காது, மூக்கு, தொண்டை டாக்டர் ர்கள் ஜூடு சைரஸ், சுநீர், பிஜீ, மதன்ராஜ் மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் வாசுகிநாதன், எட்வர்டு ஜான்சன், பிலிஸ்டன், ரஜினிஷ் ஆகியோர் மேற்கொண்டனர். சிகிச்சைக்கு தேவையான அதிநவீன நுண்ணோக்கிகள் மற்றும் நுண்கருவிகள் சென்னையில் இருந்து டாக்டர் மோகன் காமேஸ்வரன் வழிகாட்டுதலில் பெறப்பட்டுள்ளது. காக்ளியர் இம்பிளான்ட் பொருத்திய குழந்தைகள் பேசும் திறனில் இயல்பான நிலையை அடைய ஒரு ஆண்டுக்கு கேட்டல் மற்றும் பேசும் பயிற்சியை பெற வேண் டும். இதற்கு முன்பு குமரி மாவட்டத்தில் இருந்து 38 குழந்தைகள் சென்னை போன்ற இடங்களில் இத்தகைய சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் முதல் 6 ஆண்டுக்குள் சிகிச்சையை மேற்கொண்டால் 100 சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கேட்கும் திறனில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், பேசுவதற்கு காலதாமதம் ஆனாலும் உடனடியாக அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment