FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, June 15, 2015

"மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை'

தாம்பரம்,15 June 2015


மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் பொறுப்புணர்வோடும் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு, மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பயிலரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு தொடர்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை டாக்டர் நீரதா சந்திரமோகன் வெளியிட, பாரத் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வே.கனகசபை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் சுமார் 3.48 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,வாய் பேசாமை குறைபாடு,கேட்கும் திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் வாழும் மாற்றுத் திறனாளிகள்-சிறப்புக் குழந்தைகளுக்கு சிகிச்சை, பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் குறைபாடு சான்றிதழ் அளிப்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment