FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, August 25, 2015

விருதுநகரில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 37 பேர் கைது

விருதுநகர், 25 August 2015
 விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பகம், முருகேஸ்வரி, அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க ஆண்கள் இருக்கக் கூடாது, ரூ.5000 மதிப்புக்கு மேல் சொத்து இல்லாமல் இருப்பது போன்ற பொல்லாத விதிமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. தற்போது, கடந்த ஏப்.17ம் தேதி வெளியிட்ட அரசாணையில் உதவித் தொகை பெற அனாதையாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இம்மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாசி-21 பேரும், அருப்புக்கோட்டை-11 பேரும், ராஜபாளையம்-54 பேரும், சாத்தூர்-69 பேரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பேரும் என மொத்தம் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Sunday, August 23, 2015

"அனாதை" என்றால் தான் உதவித்தொகையா? மாநிலம் தழுவிய அரசாணை நகல் எரிப்பு போராட்டம்



OFFICIALS REFUSED TO GIVE ANY ASSURANCE

AUG.25 STRUGGLE CONFIRMED
அதிகாரிகள் எந்த வாக்குறுதியும் தராததால் திட்டமிட்டபடி ஆக.25 போராட்டம்

In connection with the Aug.25 state wide "Burn GO agitation", the State Disabled Welfare Commissioner Dr. K. MANIVASAN,IAS, State Commissioner for the Social Security Schmes Thiru. PRADEEP YADAV held a talk with the TARATDAC office bearers today. It began 11-30 am and prolonged 1-20 pm.

In the 1.3/4 hours talk, the officials refused to look into the ground reality. They also refused to see "How the GO is hurting the sentiments of the disabled and how it comes out against the existing special PWD law, UN Convention which Govt of India ratified, and also the 2003 Supreme Court verdict.

The officials puts some points contrary to the facts and said that the norms has been simplified through the GO.

Hence the officials were not given any assurance to consider the basic demands, we hereby announce that the Aug.25 agitation will go as per the schedule.

S. Namburajan, General Secretary, K.R. Chakravarthi, State Treasurer, K. Murugan State Vice-President took part in the talks.



Thursday, August 20, 2015

திருச்சியில் "அனாதை" என்றால் தான் உதவித்தொகையா? மாநிலம் தழுவிய அரசாணை நகல் எரிப்பு போராட்டம்



மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த முடிவு: மத்திய அரசின் செயலாளர் தகவல்

19.08.2015, 
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக் கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த திட்ட மிடப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் லோவ் வெர்மா தெரிவித்தார்.

சர்வதேச டவுன் சிண்ட்ரோம் அமைப்பு மற்றும் தமிழக டவுன் சிண்ட்ரோம் சங்கம் இணைந்து நடந்தும் 12-வது உலக டவுன் சிண்ட்ரோம் (மரபணு குறைபாடு) மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் லோவ் வெர்மா மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டவுன் சிண்ட்ரோம் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் லோவ் வெர்மா பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் மாற்றுத்திறனாளிகளின் வகைகளை 9-ல் இருந்து 15 ஆக மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாற்றுத்திறனாளி களுக்கு 2 விதமான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை பெற முடியும். இந்தியாவில் முதல் கட்டமாக போபால், ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப் பட உள்ளது. நாடு முழுவதும் 48 முக்கியமான நகரங்களில் ஆய்வு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி வயது வந்தோர் காதுகேளாதவர் சங்கத்தில் 30 வது ஆண்டு விழா மற்றும் சங்க கட்டிட அடிக்கல் நாட்டும் விழா



Dinakaran - Tamil Nadu government torturing Handicapped people too | போராட்டம் நடத்தினால் மக்களை மட்டுமல்ல... மாற்றுத்திறனாளிகளையும் பந்தாடும் தமிழக அரசு...!

Monday, August 17, 2015

பெருந்துறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்!

16.08.2015, ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம்,, கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.



இந்தச் சுயம்வரத்தில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்.சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.



இந்தத் திருமணத்திற்கு இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை கீதாபவன் அறக்கட்டளை சார்பில் கொடுக்க இருக்கிறார்கள். இதில் 2 கிராம் தங்கம், இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள், 52 வகை சீர்வரிசைகள் என அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் மறியல்: மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து சென்றது போலீஸ்

16.08.2015, மதுரை: மதுரையில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி மதுரை காளவாசலில் உண்ணாவிரதத்தை துவக்கினர். அடுத்த நாள் உண்ணாவிரத பந்தலை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். எனினும் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். 3ம் நாளான நேற்று முன்தினம் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு இறங்க மறுத்தவர்களை டும் வாக்குவாதத்திற்கு பின்னர் வளாகத்தில் இறக்கி விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே சிலர் தத்தனேரிக்கு சென்று, சுடுகாட்டில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

4வது நாளாக நேற்றும் மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்தனர். போலீசார் வந்து பேசியும் மறியலை கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். சிலர் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அவரது முகத்தில் பீய்ச்சி அடித்து, மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர். திடீரென போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரையும் வலுக்கட்டாயமாக சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டதால், பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். போலீசார் விடாமல் இழுத்து சென்று, அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பணியில் சேர்ந்த மேலும் பலர் சிக்குகிறார்கள்:மாற்றுத்திறனாளிகள் என போலி சான்று வழங்கி மோசடி : சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவுள்ளனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டிசம்பர்-3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மது விலக்குக்கோரி ஏற்கனவே 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும், கடந்த 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகாததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கிவுள்ளனர்.

தமிழகத்தில் மது விலக்கு அமல்பத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, August 15, 2015

5th Deaf Resource Development Programme 2015

Dear all member & Family & Friend & student.

We are extremely happy to invite you for the 5th DRDP of
NDFC Trust, Calicut on 22th November 2015 at 900 AM to 5PM. Venu: New Nalanda Hotel Hall, Calicut.

Welcome to all Deaf and All Deaf Association and Deaf Club will be to 5th DRDP of NDFC Trust.

With warm regards.

NDFC Trust & Committe.

Friday, August 14, 2015

7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மகனுக்கு பரிசளிக்க... ஜூவிலிருந்து பபூன் குரங்கை திருடிச் சென்ற பாசக்கார அம்மா!

ஸ்கோப்ஜே, மாசிடோனியா: காதுகேளாத தனது ஏழு வயது மகனின் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதற்காக, அவனுக்குப் பிடித்த பபூன் குரங்கை மிருகக்காட்சி சாலையில் இருந்து திருடிச் சென்ற அம்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது மாசிடோனியா நாடு. இந்நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜேயில் உள்ள மிருகக்காட்சி சாலையில் லூகா என்ற பதினெட்டு மாதமான பபூன் குரங்கு ஒன்று உள்ளது. தனது குறும்புத்தனமான செயல்களால் பார்வையாளர்களைக் கவரும் லூகாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், கடந்த திங்களன்று மிருகக்காட்சி சாலையின் இரும்பு வலைகளை உடைத்து லூகாவை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஊழிகர்கள் ஆய்வு செய்த போது, ஒரு பெண் லூகாவைத் தனது கைப்பையில் திணித்து மறைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அவர்கள் நடத்திய விசாரணையில், லூகாவைத் திருடிச் சென்ற பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அந்தப் பெண் தனது 7 வயது மகனுடன் அடிக்கடி மிருகக்காட்சி சாலைக்கு வந்ததும், லூகாவின் குறும்பை ரசித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்து சுமார் 50 மைல் தூரத்தில் வசித்துவந்த அந்தப் பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் லூகாவையும் மீட்டு மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், ‘தங்களது 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மகன், லூகாவை அதிகம் ரசித்ததாகவும், எனவே, அவனது பிறந்தநாளுக்குப் பரிசளிக்க அதனைத் திருடிச் சென்றதாகவும்' தெரிவித்துள்ளார்.

சாகும்வரை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்: 3 பேர் மயக்கம்!

14.08.2015, மதுரை:
 மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 2வது நாளாக மதுரையில் இன்று நடத்தி வருகிறார்கள். காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர், மயக்கமடைந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வந்த ஆம்புலன்சும் ரிப்பேர் ஆகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து, தாமதமாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இவர்களின் பிரச்னைகளை கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



போராட்டக்குழுவினரிடம் பேசினோம். "படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். வங்கி கடன் தர வேண்டும். ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகளையும், பொதுக்கழிப்பிடங்களையும் மாற்று திறனாளிகள் நிர்வாகிக்க தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவார் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தைப்போல கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். எங்கள் பிரச்னைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் வாழும் 24 லட்சம் மாற்று திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, அமைச்சரோ எங்கள் பிரச்னைகளை கேட்க வரவில்லை. அதனால்தான் சாகும் வரை போராட்டத்தில் இறங்கி விட்டோம்" என்றார்கள்.

நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படும் சூழலில் மாற்று திறனாளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

Thursday, August 13, 2015

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசு

13.08.2015, திருவள்ளூர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்து, தமிழ் மொழியை பயிற்று மொழியாக பயின்று, பொதுத் தேர்வில் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பெற்ற, செவித்திறனற்ற, பேச இயலாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆறு பேருக்கு, ரொக்கப்பரிசு மற்றும் விடுதி கட்டணம் வழங்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் 1 லட்சத்து 9,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sound of silence

Sound of silence

Jehan Daboo during a training session at the CCI

Despite hearing impairment, Jehaan Daboo stays oblivious of distractions and converts his weakness into strength

Eyes stalk the shuttle, glance at the opponent across the net, look at the raised hands and fist pumps at the side and are back to business. The memory runs like a silent movie in Mumbai shuttler Jehan Daboo's mind.

Jehan was the only Indian to participate in the World Deaf Youth Badminton Champion-ships in Bulgaria last month. And the teenager won a bronze staking claim to the throne of India's next hearing-impaired badminton star.

The 18-year-old suffers from a congenital bilateral profound sensory neural hearing impairment from early childhood and underwent cochlear implant surgery to be able to hear.

In the Deaf Championships, the use of hearing aids is obviously not permitted.

"All distractions are wiped away when I remove it (hearing aid). I'm more focused," Jehan does not mind playing in the isolation of pin-drop silence, one that can't be breached by even the loudest cheers or screams. "But I sleep very well (without the hearing aid). It's an added bonus," he says jokingly.

Jehan is now training tirelessly to qualify for the 8th Asia Pacific Deaf Games in Taoyuan, Taiwan, scheduled for October later this year. "Mondays to Fridays, I practise from 3pm to 6pm and have physical conditioning on Tuesday, Friday, Saturday and Sunday at 6 am. My target is to get a medal. I will be training very hard," a maturity, far beyond his age, flashed in his big youthful eyes.

A couple of days after his bronze heroics, Jehan took part in the 4th World Deaf Badminton Championships, also in Bulgaria, and finished fifth in the Team Championship and the men's doubles event.

Jehan started playing badminton at the age of 8 under coach Hufrish Nariman at the Tata Padukone Academy in CCI. "My parents wanted me to play a sport. I started off with football and tennis but it didn't work out. Then I started playing badminton," Jehan recalls.

Nariman, who is still his coach, has big dreams for her ward. "He has a good smash, good strokes and executes the drop very well. His footwork is also very good. But the competition is really tough. He has to build up more strength," she says about Jehan, who also represented India at the Summer Deaflympics in 2013, also in Bulgaria.

"My main focus is the Deaflympics. I want to win medals there," his features struggled to hide his excitement.

Despite his hectic training schedule, Jehan tries to manage his time and lead as normal a college life as his commitments allow.

"My college (HR College) has helped out a lot and they allow me to play," he says. Jehan is a 12th standard student and is keen on pursuing law in the future.

Jehan's parents have stood behind him as a rock. "We worked with him rigorously by doing Auditory Verbal Therapy (one on one therapy with the child parent and therapist) since the time he was fitted with hearing aids to enable him to learn to listen and speak by using whatever residual hearing he had. As language started becoming more complex, we found that Jehan was finding it difficult to keep up with the pace at which his peers were talking and picking it up.

Wednesday, August 12, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் DEAF கீதாவிற்கு உரிமை கோரும் 4 தம்பதியர்



பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண் கீதா தங்கள் மகள் தான் என நான்கு மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் இந்திய பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

அந்த அனாதை பெண்ணின் பெயர் கீதா என்று தெரியவந்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த பெண்ணை தாய்நாட்டிற்கு அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கராச்சி சென்று கீதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். கீதாவின் புகைப்படம் தொலைகாட்சிகளில் வெளியானதும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒரு வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி அந்த பெண் தங்கள் மகள் தான் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தங்கள் மகள் அமிர்தசரசிலிருந்து விவரம் அறியாமல் வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

ஆனால், அடுத்தடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் கீதா தங்கள் மகள் தான் என உரிமை கோரினர். பலர் கீதாவை உரிமை கோருவதால் அந்த தம்பதிகளை பற்றி விவரம் அரிய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறியுள்ளார்.

இந்திய தூதரிடம், கீதா தாங்கள் ஏழு சகோதர சகோரதிகள் என்று கூறியதாகவும், இந்த விவரத்தை பயன்படுத்தி கீதாவை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது பெற்றோருடன் வைஷ்ணோ தேவி கோவிலிற்கு சென்றதாகவும் கீதா கூறியுள்ளதாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கீதாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.

தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

Tuesday, August 11, 2015

DEAF மாற்றுத்திறனாளி கைது

11.08.2015, திருப்புவனம்: 
திருப்புவனம் பழையனூர் கருப்புராஜா,48. காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர். இவர் பழையனூரில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்ல டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். கண்டக்டரிடம் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிக்கான இலவச பஸ் பாஸ் அட்டையை காண்பித்துள்ளார். திருப்புவனத்தில் மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர் போஸ் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்ததில் போலி என தெரியவந்தது. திருப்புவனம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கருப்புராஜாவை ரிமாண்டிற்கு அனுப்பினர்.

கோவிலுக்கு வந்த DEAF மாற்றுத்திறனாளி மாயம்

11.08.2015, திருத்தணி: முருகன் கோவிலுக்கு வந்த, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மாயமானார்.சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, பாலைய்யாகொத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது, மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவர்). கடந்த, 7ம் தேதி, குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.பின், மொட்டை அடிப்பதற்காக அங்குள்ள கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அவரது தந்தை வந்து பார்த்தபோது, அவர் மாயமானது தெரிந்தது.தொடர்ந்து மலைக்கோவில், திருத்தணி நகரில் தேடியும் கிடைக்காததால், நேற்று, திருத்தணி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிக்கிய இந்திய DEAF இளம்பெண்ணை மீட்க உபி முதல்வர் உத்தரவு - தி இந்து

Saturday, August 8, 2015

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அடையாள அட்டை

07.08.2015
அரசு பேருந்துகளில் பயண சலுகை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும்' என, மாநில ஆணையரிடம் மாற்றுத்திறனாளி நல சங்கம் மனு அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள்மாற்றுத்திறனாளிகள், அரசு சலுகை பெற தேசிய அடையாள அட்டை அவசியம். இத்துடன், மூன்று மருத்துவர் கையொப்பமிட்ட பாஸ் புத்தகமும் வாங்க வேண்டும். அந்த புத்தகத்தின் நகலை காண்பித்து, மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண சலுகை பெற்றனர்.
ஆனால், சென்னை மாற்றுத்திறனாளி ஆணையரகம் மற்றும் சில மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்களில், ஒரு படிவத்தில், ஒரு மருத்துவர் மட்டும் கையெழுத்திட்டு அளிக்கும் மாற்றுத்திறனாளி சான்று தனியாகவும், நீல நிற பாஸ் புத்தகம் தனியாகவும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில், நீல நிற பாஸ் புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிதாக அளித்த சான்று நகலை காட்டி, மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயண சலுகை பெறுவதில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது. பேருந்து நடத்துனர்களுக்கு புதிய சான்று பற்றிய விழிப்புணர்வு இல்லை; அந்த சான்றை ஏற்க நடத்துனர்கள் மறுக்கின்றனர். கடந்த காலம் போல், மூன்று மருத்துவர் கையெழுத்து போட்ட பாஸ் புத்தக நகலை கேட்கின்றனர்.
குழப்பத்தை தீர்க்க...இந்த குழப்பத்தை தீர்க்க, புதிய அடையாள சான்றையும் ஏற்கும் வகையில் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் நம்புராஜன் கூறுகையில், ''இந்த குழப்பத்தை தீர்க்க, எல்லா மாவட்டங்களிலும், ஒரே மாதிரியான அடையாள சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு மனு அளித்துள்ளோம்,'' என்றார்.

Thursday, August 6, 2015

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

சென்னை, 01 August 2015
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அரசு வேலைகோரி தங்களது படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன.
அதன்படி, ஜூன் மாத நிலவரப்படி அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. அதில், பெண்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆக இருக்கிறது.
சிறப்புப் பிரிவின் கீழ் இலங்கை வாழ் மாணவர்கள் 934 பேரும், கலப்புத் திருமணம் செய்தவர்களில் 39 ஆயிரத்து 721 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 719 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
வகுப்பு வாரியாக தகவல் வெளியீடு: வேலைவாய்ப்பு கோரி, பதிவு செய்தவர்களில் வகுப்பு வாரியாகவும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக உண்ணாவிரதம் : பல்வேறு கட்சியினர் ஆதரவு

டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை சேப்பாக்கத்தில் 3 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாளின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்ட இடத்திற்கு நேரில் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்ட குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியினர், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளி தேவி மற்றும் அபர்ணா மயக்கமடைந்ததை அடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ‘டிசம்பர்-3’ இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். அவர் களை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். மாலை 5.30 மணியளவில் அவர்களை அழைத்து வந்து,சேப்பாக்கம் பறக்கும் ரயில் பாலத்தின்கீழ் இறக்கிவிட்டுச் சென் றனர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அந்த இடத்திலேயே 2-வது நாளாக நேற்றும் உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேவி நேற்று மாலை மயங்கி விழுந்தார். பின்னர் அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

P2P Deaf Literacy


Wednesday, August 5, 2015

25 லட்சம் மாற்றுதிறன் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

05.08.2015, புதுடெல்லி: ‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 லட்சம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 405 சிறப்பு பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2014-15ம் கல்வியாண்டில் இதுவரை 52,624 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்த தகவலின்படி, 2013-14ம் கல்வியாண்டில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 907 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு வர இயலாத அதிகம் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி கற்கும் வசதியையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுவிலக்கு: திமுக அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு : மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தார்

Give disability certificate in single model - avoid confusion

* The disability certificate given by the state differs district to district and it makes lot of confusion to avail benefits for disabled.

* In Chennai and other one or two districts an A-4 sized disability certificate along with old type pass book in blue colour is being given by the govt for the past 2 years.
* But, the old type blue colour pass book alone still given by the state as pass book in many districts.
* It makes lot of confusion among disabled and stake holders.
* In Tamilnadu, there is a facility to avail concessional fare in the state run transport busses against giving xeroxed copies of the disab certificate.
* But the conductors of the state run busses refused to accept the new type disab certificate, since they were not sensitised.
* TARATDAC demands the State Commissioner for the Disabled to take immediate action to give a single type of certificate throughout the sate to avoid the confusion and also demand to action through the senior officials of the transport department to sensitise the conductors about the new certificate.

Tuesday, August 4, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய DEAF மாற்றுத்திறனாளி பெண்: தூதருக்கு சுஷ்மா உத்தரவு

புது தில்லி, 03 August 2015
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் தன்னந்தனியாக கண்டெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண், தனது பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

9 வயதில் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தற்போது 24 வயதாகிறது. காப்பகத்தில் வளர்ந்து வரும் சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளுக்கு பேசவோ, காது கேட்கவோ இயலாது என்பதால், அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திடீர் திடீரென எதையோ நினைத்து அழுவாள் என்றும், அவள் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும், அவளை பராமரித்து வரும் எதி அறக்கட்டளையின் தலைவர் பில்கீஸ் எதி கூறுகிறார்.