FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, August 6, 2015

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

சென்னை, 01 August 2015
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அரசு வேலைகோரி தங்களது படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன.
அதன்படி, ஜூன் மாத நிலவரப்படி அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. அதில், பெண்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆக இருக்கிறது.
சிறப்புப் பிரிவின் கீழ் இலங்கை வாழ் மாணவர்கள் 934 பேரும், கலப்புத் திருமணம் செய்தவர்களில் 39 ஆயிரத்து 721 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 719 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
வகுப்பு வாரியாக தகவல் வெளியீடு: வேலைவாய்ப்பு கோரி, பதிவு செய்தவர்களில் வகுப்பு வாரியாகவும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment