FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, August 14, 2015

சாகும்வரை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்: 3 பேர் மயக்கம்!

14.08.2015, மதுரை:
 மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 2வது நாளாக மதுரையில் இன்று நடத்தி வருகிறார்கள். காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர், மயக்கமடைந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வந்த ஆம்புலன்சும் ரிப்பேர் ஆகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து, தாமதமாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இவர்களின் பிரச்னைகளை கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



போராட்டக்குழுவினரிடம் பேசினோம். "படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். வங்கி கடன் தர வேண்டும். ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகளையும், பொதுக்கழிப்பிடங்களையும் மாற்று திறனாளிகள் நிர்வாகிக்க தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவார் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தைப்போல கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். எங்கள் பிரச்னைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் வாழும் 24 லட்சம் மாற்று திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, அமைச்சரோ எங்கள் பிரச்னைகளை கேட்க வரவில்லை. அதனால்தான் சாகும் வரை போராட்டத்தில் இறங்கி விட்டோம்" என்றார்கள்.

நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படும் சூழலில் மாற்று திறனாளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

No comments:

Post a Comment