FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Wednesday, August 12, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் DEAF கீதாவிற்கு உரிமை கோரும் 4 தம்பதியர்



பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண் கீதா தங்கள் மகள் தான் என நான்கு மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் இந்திய பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

அந்த அனாதை பெண்ணின் பெயர் கீதா என்று தெரியவந்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த பெண்ணை தாய்நாட்டிற்கு அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கராச்சி சென்று கீதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். கீதாவின் புகைப்படம் தொலைகாட்சிகளில் வெளியானதும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒரு வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி அந்த பெண் தங்கள் மகள் தான் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தங்கள் மகள் அமிர்தசரசிலிருந்து விவரம் அறியாமல் வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

ஆனால், அடுத்தடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் கீதா தங்கள் மகள் தான் என உரிமை கோரினர். பலர் கீதாவை உரிமை கோருவதால் அந்த தம்பதிகளை பற்றி விவரம் அரிய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறியுள்ளார்.

இந்திய தூதரிடம், கீதா தாங்கள் ஏழு சகோதர சகோரதிகள் என்று கூறியதாகவும், இந்த விவரத்தை பயன்படுத்தி கீதாவை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது பெற்றோருடன் வைஷ்ணோ தேவி கோவிலிற்கு சென்றதாகவும் கீதா கூறியுள்ளதாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கீதாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.

தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

No comments:

Post a Comment