FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 25, 2015

விருதுநகரில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 37 பேர் கைது

விருதுநகர், 25 August 2015
 விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பகம், முருகேஸ்வரி, அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க ஆண்கள் இருக்கக் கூடாது, ரூ.5000 மதிப்புக்கு மேல் சொத்து இல்லாமல் இருப்பது போன்ற பொல்லாத விதிமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. தற்போது, கடந்த ஏப்.17ம் தேதி வெளியிட்ட அரசாணையில் உதவித் தொகை பெற அனாதையாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இம்மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாசி-21 பேரும், அருப்புக்கோட்டை-11 பேரும், ராஜபாளையம்-54 பேரும், சாத்தூர்-69 பேரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பேரும் என மொத்தம் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment