07.08.2015
அரசு பேருந்துகளில் பயண சலுகை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும்' என, மாநில ஆணையரிடம் மாற்றுத்திறனாளி நல சங்கம் மனு அளித்துள்ளது.மாற்றுத்திறனாளிகள்மாற்றுத்திறனாளிகள், அரசு சலுகை பெற தேசிய அடையாள அட்டை அவசியம். இத்துடன், மூன்று மருத்துவர் கையொப்பமிட்ட பாஸ் புத்தகமும் வாங்க வேண்டும். அந்த புத்தகத்தின் நகலை காண்பித்து, மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண சலுகை பெற்றனர்.
ஆனால், சென்னை மாற்றுத்திறனாளி ஆணையரகம் மற்றும் சில மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்களில், ஒரு படிவத்தில், ஒரு மருத்துவர் மட்டும் கையெழுத்திட்டு அளிக்கும் மாற்றுத்திறனாளி சான்று தனியாகவும், நீல நிற பாஸ் புத்தகம் தனியாகவும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில், நீல நிற பாஸ் புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிதாக அளித்த சான்று நகலை காட்டி, மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயண சலுகை பெறுவதில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது. பேருந்து நடத்துனர்களுக்கு புதிய சான்று பற்றிய விழிப்புணர்வு இல்லை; அந்த சான்றை ஏற்க நடத்துனர்கள் மறுக்கின்றனர். கடந்த காலம் போல், மூன்று மருத்துவர் கையெழுத்து போட்ட பாஸ் புத்தக நகலை கேட்கின்றனர்.
குழப்பத்தை தீர்க்க...இந்த குழப்பத்தை தீர்க்க, புதிய அடையாள சான்றையும் ஏற்கும் வகையில் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் நம்புராஜன் கூறுகையில், ''இந்த குழப்பத்தை தீர்க்க, எல்லா மாவட்டங்களிலும், ஒரே மாதிரியான அடையாள சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு மனு அளித்துள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment