05.08.2015, புதுடெல்லி: ‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 லட்சம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 405 சிறப்பு பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2014-15ம் கல்வியாண்டில் இதுவரை 52,624 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்த தகவலின்படி, 2013-14ம் கல்வியாண்டில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 907 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு வர இயலாத அதிகம் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி கற்கும் வசதியையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment