புது தில்லி, 03 August 2015
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் தன்னந்தனியாக கண்டெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண், தனது பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
9 வயதில் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தற்போது 24 வயதாகிறது. காப்பகத்தில் வளர்ந்து வரும் சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளுக்கு பேசவோ, காது கேட்கவோ இயலாது என்பதால், அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திடீர் திடீரென எதையோ நினைத்து அழுவாள் என்றும், அவள் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும், அவளை பராமரித்து வரும் எதி அறக்கட்டளையின் தலைவர் பில்கீஸ் எதி கூறுகிறார்.

No comments:
Post a Comment