டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை சேப்பாக்கத்தில் 3 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாளின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்ட இடத்திற்கு நேரில் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்ட குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியினர், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளி தேவி மற்றும் அபர்ணா மயக்கமடைந்ததை அடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment