FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 12, 2025

பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதி உதவி



08.04.2025  பெரம்பலூர் : 
பெரம்பலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.06 லட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கத்துடன் ரூ.4.50 லட்சம் திருமண நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்டக் கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோர், திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.8.06 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்களையும், ரூ.4.50 லட்சம் திருமண நிதியுதவியும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் என 13 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.12.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப் பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்கக் கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்கள் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூகப் பாது காப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட தாட்கோ மேலாளர் கவியரசு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டஅனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment