FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, April 23, 2025

விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான வினாக்களுக்கு துணை முதலமைச்சர் பதில்



22.04.2025 
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான வினாக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் விவரம்;

“கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நான் பேசும்போது, நம்முடைய முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன்படி பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர், அவர்களுடைய கைகளால் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல இந்த ஆண்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நிச்சயமாக இந்த ஆண்டும் குறைந்தது 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் பெற்று தரப்படும். அதேபோல, விளையாட்டு வீரர்கள் 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் காவல் துறையில் பணியாற்றுகின்ற வாய்ப்பினை நமது அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதற்கான அரசாணை இந்த ஆண்டு வெளியிடப்பட்டு, இதுவரை சென்று ஆண்டில் கொடுத்த 104-ல், 11 வீரர்களுக்கு காவலர் பணி Police Constables பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது காவல் துறையில் 32 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) பணியிடங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விரைவில் இரண்டாம் நிலை காவலர் அதாவது Police Constables பொறுப்புக்கும் அந்த விண்ணப்பங்கள் கோரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். காவல் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு பணியாற்றுகின்ற வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளுடைய முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசும், முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். கடந்த வாரம்கூட, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளை ஊராட்சி அமைப்புகளில் நியமனம் செய்வதற்கான சட்டமுன்வடிவை இந்த அவையில் அறிமுகப்படுத்தினார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சுமார் 13 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வரவிருக்கின்றார்கள்.

இதற்காக மாற்றுத்திறனாளி சகோதரர்கள், சகோதரிகள் முதலமைச்சர் அவர்களையும், என்னையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அவர்கள் சொன்ன வாக்கியம், ‘இத்தனை நாட்களாக கேட்கும் இடத்திலிருந்த நாங்கள், முதன்முதலாக கொடுக்கும் இடத்திற்கு வரப்போகிறோம்’ என்ற நம்பிக்கையான வார்த்தைகளை இங்கே நான் பதிவு செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற துறைகளைப்போலவே, விளையாட்டுத் துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.

போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய தமிழ்நாடு Champions Foundation அறக்கட்டளைமூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகின்றோம். இதுவரை 198 Para players-களுக்கு மட்டும் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் அளவிற்கு Champions Foundation-லிருந்து அவர்களுடைய பயணச் செலவிற்கு, பயிற்சி செலவிற்காக மட்டுமே செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மற்ற வீரர்களுக்கு இணையாக உயரிய ஊக்கத்தொகை high cash incentive இதுவரைக்கும் 196 para players-களுக்கு நம்முடைய அரசு 27 கோடி ரூபாய் high cash incentive உயரிய ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறது என்றுக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த 3% இடஒதுக்கீட்டின்கீழ் மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அரசுத் துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்றாண்டு target 100 என்கிறபோது, 104 achieve செய்தோம். இந்தாண்டு 100. இதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நிச்சயமாக வேலை வாய்ப்பு அரசு பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment