
10.04.2025
துருக்கியிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்பவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்காது, அவர்களால் பேச முடியாது.
இப்படி அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அறிவியலாளர்கள்.
பெரும்பாலும் சைகை பாஷை மட்டுமே...
துருக்கியிலுள்ள கோகோவா (கோகோவா) என்னும் கிராமத்தில் வாழும் பாதிபேருக்கு வாய் பேச முடியாது, அவர்களுக்கு காதும் கேட்காது.
ஆகவே, கிராமத்தில் பெரும்பாலானோர் சைகை பாஷைதான் பேசுகிறார்கள்.
வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால்தான் அந்த மக்களுக்கு இந்த பிரச்சினை என்கிறார்கள் சிலர்.
மற்றவர்களோ, இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் கிராமத்தில் குழந்தை பிறக்கும்போது, அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அக்கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என்கிறார்.

No comments:
Post a Comment