09.04.2025
நாமக்கல்: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனுடைய இளம் சிறாா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் அறிவுசாா் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற, செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயதுடைய இளம்சிறாா்கள் ஒருநாள் சுற்றுலாவாக சேலம், குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.உமா பங்கேற்று கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
இந்தப் பேருந்தில் இளம்சிறாா்களுடன் அவா்களது பெற்றோா், செவிலியா், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியா்கள் உடன் சென்றனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

No comments:
Post a Comment