FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 7, 2025

“அந்தரங்க உறுப்பை தொட்டு…” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய தந்தை…. கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்….!!



06.04.2025, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த 27 வயது வாய்பேச முடியாத, காது கேட்காத பெண் ஒருவர் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் பாட்டி இறந்துவிட்டார். அதன் பிறகு வாய் பேச முடியாத பெண் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரங்களில் தவறான உடல் தொடுகைகள், குளிக்கும் பொழுது அந்தரங்க உறுப்பை தொடுதல் போன்ற செயல்களில் தந்தை ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வீடியோ கால் மூலம் சித்தி மற்றும் அத்தைக்கு சைகைகளில் தனது நிலையை விளக்கியுள்ளார். “தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்கேயாவது போய்விடுவேன்” என அழுதபடி கூறியதை பார்த்த உறவினர்கள் அவரது தந்தையிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அவர் “என்ன செய்ய முடிகிறதோ செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார். இதனால் உறவினர்கள் கோபமடைந்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகும், ஒரு வாரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சமரசம் பேச முயற்சிப்பதாகவும், பெண்கள் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



No comments:

Post a Comment