FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 7, 2025

அரசியல் கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் 'சைகை மொழி' ஆசிரியை ஏன்? மார்க்சிஸ்ட் மாநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்! - CPIM MEETING SIGN LANGUAGE

சைகை மொழியில் மொழிபெயர்ப்பு செய்த ஆசிரியர் மகாலட்சுமி

07.04.2025 மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளுக்காக தலைவர்கள் பேச்சை சைகை மொழியில் மொழிபெயர்ப்பு செய்த ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு புரியும் வகையில், தலைவர்களின் பேச்சுகளை, ஒற்றை ஆளாக மேடையில் நின்று சைகை மொழியால் மொழிபெயர்த்து மகாலட்சுமி என்ற ஆசிரியை அசத்தியுள்ளார். தற்போது அவர் சைகை மொழியால் விளக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தொடங்கி நேற்று (ஏப்ரல் 6) வரை நடைபெற்றது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு:

இந்த நிலையில், மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு புரியும் வகையில், பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் பேசியதை, சைகை மொழியால் மொழிபெயர்த்தார் ஆசிரியர் மகாலட்சுமி. நேற்று நடைபெற்ற மாநாட்டு பொதுக்கூட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 700 க்கும் மேற்பட்டவர்கள் செவித்திறன் குன்றியவர்கள். மாநாட்டு பொதுக்கூட்ட மேடைக்கு அருகே இவர்களுக்கு தனியிடம் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.

சைகை மொழியால் விளக்கம்:

மேடையில் தலைவர்கள் பேச தொடங்கியதும், மேடையின் இடது ஓரமாக நின்றிருந்த சைகை மொழிபெயர்ப்பாளர் மகாலட்சுமி, தலைவர்கள் பேசுவதை சைகை மொழியால் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இதன் மூலமாக அங்கிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள் , தலைவர்கள் பேசுவதை தெரிந்து கொண்டனார். இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சைகை மொழியால் விளக்கியவர் யார்?

சென்னை சைதாப்பேட்டையில் ‘அன்னை இலவச சிறப்பு மறுவாழ்வு மையம்’ உள்ளது. இந்த மறுவாழ்வு மையத்தின் தலைமை ஆசிரியர், சைகை மொழிபெயர்ப்பாளர் மற்றும் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் எஸ்.மகாலட்சுமி. இவர், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியால் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக, மகாலட்சுமி மேடையில் நின்று சைகை மொழியில் மொழிபெயர்பு செய்தார்.

இது குறித்து சைகை மொழிபெயர்ப்பாளர் எஸ்.மகாலட்சுமி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு முன்னர். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் இது போன்று பேசினேன். அப்போது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சி முன்னெடுத்த இந்த முயற்சி நல்ல வரவேற்பு பெற்றுத் தந்தது.

அதன் தொடர்ச்சியாக, மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிலும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்சியின் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற முயற்சியின் விளைவு தான் இந்த ஏற்பாடு” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்:

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் கூறுகையில், “அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த மிகச்சிறந்த முன்னெடுப்பு மற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி விளக்கம். மாற்றுத்திறனாளிகளையும் கட்சியின் ஒரு அங்கமாக கருதி அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியது வரவேற்கத்தக்கது.
அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மாநில தலைவர் வில்சன்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களில், குறிப்பாக 700-க்கும் மேற்பட்டோர் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அவர்களுக்காக இந்த மாநாட்டில் சைகை மொழியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்குப் பிறகு என்னிடம் நிறைய மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சியோடு இதனை பகிர்ந்து கொண்டனர்.

அனைத்து மேடைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். மதுரை மாநாட்டில் இந்த ஏற்பாடு செய்திருந்தோம். வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment