21.04.2025 திருச்சுழி அருகே வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தனுஷ்கோடி இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி உயிரிழந்த நிலையில் மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகனும் தஞ்சாவூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வரும் நிலையில் இங்கு தனிமையில் முற்றிலும் சிதலமடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். வீடு முழுவதும் சேதமானதால் தற்போது வீடின்றி ஊர் பொது கலையரங்கத்தில் தங்கி சமையல் செய்து வசித்து வந்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த முறை ஆய்விற்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சாலையில் செல்லும்போது அந்த வீட்டினை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து இவருக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட வேலைக்கான உத்தரவு ஆணையினை மாற்றுத்திறனாளி முதியோர் தனுஷ்கோடியிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார். அப்போது வேலைக்கான உத்தரவு நகலை வழங்கிய பிறகு முதியவரிடம் உங்கள் வீட்டை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும். உங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் வரை சென்று கோரிக்கை வைத்து வாங்கி வந்துள்ளேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இந்த வீடு கட்டி முடிக்கும் வரை அதிகாரிகள் களத்தில் இருந்து உடனுக்குடன் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சர் தங்கம்தென்னரசு உத்தரவிட்டார்.
.png)
No comments:
Post a Comment