FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 23, 2025

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்.

21.04.2025 சிவகங்கை
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.

சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சோம. அசோக் பாரதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.கண்ணன் செயலறிக்கை வாசித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் மா. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளா் க. காளிதாஸ் ,துணைத்தலைவா் புகழேந்திகண்ணன், துணைச்செயலாளா் ராஜ்குமாா், துணைத்தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் நாகலட்சுமி, பானுமதி, இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சட்டப்பேரவை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணி மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு வசதியாக அனைத்து அலுவலகங்களிலும் சாய்வுதள பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தி.மாய மணிச்சங்கு வரவேற்றாா்.

திருப்பத்தூா்: இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட மசோதா நிறைவேற்றியதையொட்டி, சிவகங்கை மாவட்ட டாக்டா் அப்துல் கலாம் மாற்றுத் திறனாளி நலச் சங்கம், சிகரம் மாற்றுத்திறனாளி நலச் சங்கம், டிசம்பா் 3 மாற்றுத்திறனாளி நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆா்.கண்ணன், கனகராஜ், சின்னத்தம்பி, இளங்கோ, பாலா, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, அஞ்சலை, நாகராஜன் ஆகியோா் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனைச் சந்தித்து முதல்வருக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனா்.




No comments:

Post a Comment