.jpg)
26.04.2025
திருப்பூர்: கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பத்து பேருக்கு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது; 33 பேருக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் நடத்தப்படும் மருத்துவ முகாமிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் மாற்றுத்திறனாளி என குறியீடு செய்வதற்கான பதிவுகள் மேற்கொள்ளவேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் படிவம் சார்ந்த சேவைகள் மேற்கொண்டனர். ஆதார், மாற்றுத்திறனாளிகள் அடையாள அடை உள்பட ஆவணங்களை பெற்று, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டது. முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி என்பதற்கான குறியீடு செய்வதற்காக, மொத்தம் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment