கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் நடந்து சென்றதாக தெரிகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியை அங்கு இருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள சித்தரசாவடி ராஜவாய்க்கால் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் பெண்ணை தொண்டாமுத்தூர் சாலையில் இறக்கி விட்டு சென்று உள்ளனர். அந்த பகுதியில் அழுது கொண்டு இருந்த பெண்ணை தோட்டத்தில் இருந்த முதியவர் பார்த்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.
பின்னர் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து விசாரித்ததில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து தற்போது தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து தனியார் தங்கும் விடுதியில் வைத்து தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment