FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 18, 2018

நடுவழியில் பிறந்த சிசுவுடன் சிகிச்சைக்காக 10 மணி நேரம் காத்திருந்த வாய்பேச இயலாத இருளர் இன பெண் : கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம்

கடலூர்: கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியில் பழங்குடி இருளர்கள் அடிப்படை வசதிகள் இன்றியும், அரசின் உரிய சலுகைகள் கிடைக்காமலும் வசித்து வருகின்றனர். மருத்துவ வசதி என்பது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. கிள்ளை அருகே சி.மானம்பாடி இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ்(30). இவரது மனைவி வாய்பேச இயலாத அஞ்சம்மாளுக்கு(28) கடந்த 23ம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. போக்குவரத்து வசதியின்றி 3 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணவருடன் நடந்து சென்றார். அப்போது நடுவழியில் குழந்தை பெற்று ரத்தம்படிந்த சிசுவையும் தொப்புள்கொடியை சுருட்டி எடுத்துக்கொண்டு 2 கி.மீ தூரம் வலியோடு நடந்து சுகாதார நிலையத்திற்கு சென்றார். ஆனால் மறுநாள் டாக்டர் வந்து பார்க்கும் வரை 10 மணி நேரம் பசியோடு காத்துகிடந்த கொடுமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அஞ்சம்மாளின் கணவர் ரமேஷ்(30) கூறியதாவது: நள்ளிரவு 1 மணி அளவில் அஞ்சம்மாள் வலி தாங்க முடியாமல் அலறியபடியே சாலையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. அஞ்சம்மாள் கூறியபடி குழந்தையின் தொப்புள் கொடியை கையால் துண்டித்து அதனை சுருட்டி வைத்துக்கொண்டேன். உடல் முழுவதும் ரத்தத்தில் நனைந்து சிசு வீறிட்டது. அந்த பகுதியில் நாய்களும் நரிகளும் அதிகம். ரத்தவாடை வீச்சத்தால் அவை எந்த நேரத்திலும் வந்துவிடுமோ என்ற பயத்தில் அஞ்சம்மாளை கைதாங்கலாக பிடித்தபடி 2 கி.மீ தூரம் நடந்து கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றேன். 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கு யாரும் இல்லை. யாரோ ஒரு வயதான மூதாட்டி ஒருவர் காவலுக்கு இருந்தார். அடுத்த நாள் காலை 11 மணி வரை அப்படியே காத்துகிடந்தோம். மனைவி மயக்கத்தில் இருந்தார். கொசுக்கடியிலும் பசியிலும் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

காலை 11 மணிக்கு டாக்டரும் செவிலியரும் வந்தும் உடனே எங்களை பார்க்கவில்லை. எங்களை பார்த்து பரிதாபப்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியதற்கு பிறகே அஞ்சம்மாளை பார்த்தனர். குழந்தையின் உடம்பில் ரத்தும் திட்டு திட்டாக உறைந்து காய்ந்து கிடந்தது. குழந்தையை துடைத்து விடுமாறு கெஞ்சினோம். மருத்துவமனையில் பஞ்சு இல்லை வாங்கி வந்து தந்தால் துடைத்துவிடுவோம் என்றனர். அங்கிருந்த சிலர் பஞ்சு வாங்கி தந்தனர். அதன் பின்னர் நீண்ட நேரம் கழித்தே சிசுவை சுத்தம் செய்தனர். முதல் நாளன்று தாய்க்கும், குழந்தைக்கும் எவ்வித தடுப்பூசி, மருந்து மாத்திரை எதுவும் கொடுக்கவில்லை. இரு தினங்களாக அஞ்சம்மாள் கடும் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், 24 மணி நேரம் திறந்திருக்க வேண்டிய கிள்ளை அரசு மருத்துவமனை இரவு நேரங்களில் இயங்குவதில்லை.

இரவு நேரத்தில் பிரசவ சிகிச்சைக்காகவும், உயிர்காக்கும் முதலுதவிக்காகவும் பணியில் இருக்க வேண்டிய செவிலியரும் இருப்பதில்லை.பழங்குடி இன கர்ப்பிணி பெண்கள் வந்தால் உடம்பில் ரத்தம் இல்லை, குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும், இதனால் சிதம்பரம் அல்லது கடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அலைக்கழிப்பதால் பெரும்பாலான இருளர் பெண்கள் தங்கள் குடிசைகளிலேயே உயிரை பணயம் வைத்து குழந்தை பெறுகிறார்கள். இதனால் கடந்த இருவாரங்களுக்கு முன்னால் பிரசவத்திற்காக வந்த கலைஞர் நகர் பழங்குடி இருளர் ஜோதி என்பவரின் மனைவி பாவணியை திருப்பி அனுப்பியதில் அவர் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து குழந்தையின் தொப்புள்கொடியை அரிவாள் மனையில் அறுத்த சம்பவம் நடந்தது. இதுபோன்று சி.மானம்பாடியை சேர்ந்த சின்னக்கண்ணு மனைவி சகுந்தலா(27) கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில் அவர் சிறிது நேரத்தில் அங்கேயே குழந்தை பெற்றார். குறிப்பாக பழங்குடியின பெண்கள் இந்த மருத்துவமனையில் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

No comments:

Post a Comment