11.10.2018
திருப்பூர்:மாவட்டத்தில் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அலுவலர்களுக்கு இந்திய 'சைகை' மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளையும் தேர்தல் நிகழ்வில் பங்கு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, காது கேட்க இயலாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தனி தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள்மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
காது கேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் சபிகா, பயிற்சியளித்தார். கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பயிற்சிரை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment