18.10.2018
புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை கடந்த 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில், புனேயில் காத்கி புறநகர் பகுதியில் உள்ள கிர்க்கியில் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளியான 34 வயது பெண்ணை இரவுப் பணியின் போது மருத்துவமனை பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் மற்றொரு ராணுவ வீரரிடம் கூறவும் அந்த அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் குற்றம் புரிந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதற்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதையடுத்து மேலும் இரு வீரர்கள் என நான்கு ராணுவ வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.
நான்காம் பணிநிலை ஊழியரான மாற்றுத் திறனாளி பெண் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள என்ஜிஓ ஒன்றை அணுகி தனக்கு நேர்ந்த துன்பங்களை விளக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), 354-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அவர்கள் மீது துறை சார்ந்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு கமாண்டர் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment