FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, October 9, 2018

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை


09.10.2018, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment