மதுரை:தமிழகத்தில் முதன்முறையாக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் மதுரையில் அமைய உள்ளது.
அழகர்கோவிலில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.நிறுவனர் டாக்டர் ராமசுப்ரமணியன் வரவேற்றார்.ஆலோசகர் சங்கரபாண்டியன், மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பாரிபரமேஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் பேசினர்.
அரசு திறன்மேம்பாட்டு கழக அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, ''மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் மகேஸ்வரி, ''தமிழகத்தில் 1.86 லட்சம் பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கி உள்ளோம்'' என்றார்.கலெக்டர் நடராஜன், ''தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்க உள்ளோம்'' என்றார். செயல் இயக்குனர் ராஜ்குமாரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment