12.10.2018
திண்டிவனம்:திண்டிவனத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. திண்டிவனம் வாசவி நர்சரி பள்ளியில், திண்டிவனம் அரிமா சங்கம், ராம் டெக்ஸ்டைல்ஸ், மெட்ராஸ் இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நேற்று காலை மருத்துவ முகாமை நடத்தியது. முகாம் துவக்க விழாவிற்கு, திண்டிவனம் அரிமா சங்க தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். செயலர் சக்திவேல் வரவேற்றார்.
ராம்டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஓவியர்தேவ், சாய்நாத், வழக்கறிஞர் கார்த்திக், ராமமூர்த்தி, நாகப்பன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் குழுவை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

No comments:
Post a Comment