FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Tuesday, October 23, 2018

திருவொற்றியூர் நூலகத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு கம்ப்யூட்டர் வசதியுடன் சிறப்பு பிரிவு

சென்னை, அக்.22–
திருவொற்றியூரில் உள்ள கிளை நூலகம் தமிழகத்தின் முன்மாதிரி நூலகமாக திகழ்ந்து பல்வேறு விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளது.

இந்த நூலகம் வடசென்னை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.

திருவொற்றியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.குப்பனின் தீவிர இடைவிடாத முயற்சி காரணமாக அவரது தொகுதி மேம்பாட்டு நிதி 82 லட்சம் ரூபாய் மற்றும் பொது நூலக துறை நிதி 9 லட்சத்து 90 ஆயிரம் என சுமார் 92 லட்சம் ரூபாய் செலவில் இந்த நூலகம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.22 ஆயிரத்து 130 நூலகர்கள் உள்ளனர். இது தமிழகத்திலேயே முதலிடமாகும். புரவலர் வைப்பு தொகை வைத்திருப்பதிலும் தமிழகத்தில் முதலிடம் நன்கொடை பொருட்களை பெறுவதிலும் முதலிடம் பெற்று பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து இந்த நூலகம் நிமிர்ந்து நிற்கிறது.

தமிழக அரசின் பொது நூலகத் துறை, திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ், சென்னை திருவொற்றியூர், சண்முகனார் பூங்கா அருகே 1958ல் இருந்து கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது இட நெருக்கடியால், 2003ல் 4 லட்ச ரூபாய் செலவில், 760 சதுர அடியில், இந்த நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

நூலகத்தின் வளர்ச்சிக்கு இந்த இடமும் கட்டிடமும் போதாது என்பதால், வாசகர் வட்டத்தினரால் அப்போதைய எம்.எல்.ஏ. குப்பனிடம் நூலகத்தை விரிவாக்கம் செய்ய நிதி கோரப்பட்டது.

பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்து, 4 தளங்கள் கொண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகம் பல நவீன வசதிகளுடன் டிஜிட்டல் நூலகமாக மாற்றப்பட்டு, 2015ல் திறக்கப்பட்டது.

இங்கு, நூலக உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக 30 ரூபாயும், ஆண்டு சந்தா புதுப்பிப்பதற்கு 10 ரூபாயும் பெறப்படுகிறது. நவீன வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நூலகம், திருவொற்றியூர் சுற்று வட்டார, மாணவ, மாணவியருக்கு மட்டுமன்றி வாசர்கள், பொதுமக்களுக்கான அறிவுக் கோவிலாக அமைந்துள்ளது.

மாதந்தோறும், நூலக வாசகர் வட்டம் சார்பில், மாதத்தில் 2வது சனிக்கிழமை, சிந்தனைக் குரல் என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்று வருகிறது.

பேச்சாளர்கள்

இதுவரை, 29 கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. 3 மாத இடைவெளியில் சிந்தனை சாரலின் கருத்தரங்க கூட்டம், தனியார் பள்ளி வளாகத்தில், 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில், சுகிசிவம், பர்வீன் சுல்தானா, தமிழருவி மணியன், கலியமூர்த்தி, ரம்யா உள்ளிட்ட பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி, யோகா, பேரணி போன்ற நிகழ்வுகளும் இந்நூலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

கொடையாளர், புரவலர்களால் வழங்கப்பட்ட, 15.29 லட்சம் ரூபாய், அசோக் லேலண்டு சமூக வளர்ச்சித் திட்டம் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தளவாடப் பொருட்கள் கிடைத்துள்ளன.

ரூ.10 லட்சம் கணினிகள்

எச்.சி.எல்., அறக்கட்டளை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 28 கணினிகள், ஜி. வரதராஜன் உள்ளிட்ட நால்வரால் 6.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 கண்காணிப்பு கேமிராக்கள், 16 ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் வழங்கிய, 1.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான டி.வி. மற்றும் நாற்காலிகள், நன்கொடையாக கிடைத்துள்ளது.

50 லட்ச ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள புத்தகங்கள் என, ஒட்டு மொத்தமாக 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன், இந்நூலகம், உலகத் தரத்திற்கு இணையாக உயர்ந்துள்ளது.

நூலகத்தில் உள்ள கணினி மூலம், தற்போது வரை 172 மாணவ, மாணவிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி, எச்.சி.எல். நிறுவனம் மற்றும் வாசகர் வட்டத்தால் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

இங்கு, 2,500க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவிகளுக்கு, 740 மகளிருக்கு இலவச கணினி பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20–ந் தேதி அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த நூலகத்திற்கு வந்தார். அங்கு காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு கம்ப்யூட்டர் வசதியுடன் சிறப்பு பிரிவை துவக்கி வைத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் இந்த நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை ஏற்ற அமைச்சர் செங்கோட்டையன் ஏப்ரல் 23–ந் தேதி அன்று போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்கு அமைச்சர் அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து மே 8–ந் தேதி முதல் இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என நூலகர் பானிக் பாண்டியன் தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ரெயில்வேயில் பணியில் சேருவதற்கான தேர்வு, வங்கி தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பயிற்சி வகுப்பில் சேர 200–க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை இதுபோன்று தேர்வு பயிற்சிக்கு வடசென்னை பகுதி இளைஞர்கள், மாணவர்கள் அண்ணா நகர், தி.நகர் போன்ற தென்சென்னை பகுதிகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் நிலை இருந்தது. பெரும்பாலானோருக்கு தனியார் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற கட்டணம் செலுத்த முடியாத நிலை இருந்தது.

வரப்பிரசாதம்


இந்த நிலையில் திருவொற்றியூரில் இதுபோன்று இலவச பயிற்சி வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி இளைஞர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும். இங்கு பயிற்சி பெற தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூர், பொன்னேரி என சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள்.

இந்த நூலகத்தில் 12 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வுடன், பணி செய்கிறார்கள். நூலகத்திற்கு வருவோரை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான நூல்களை கொடுக்கிறார்கள். இங்கு 1–ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிறு தோறும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 2 மாதத்துக்கு ஒருமுறை இந்த தேர்வு நடைபெறுகிறது. இங்கு பயிற்சி வகுப்பு நடத்தும் பல்வேறு துறை நிபுணர்கள், ஆசிரியர்கள் எந்தவித பிரதிபலனும் பாராமல் எந்த ஊதியமும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் வந்து பயிற்சி அளிக்கிறார்கள்.

கதை சொல்லும் நேரம்

குழந்தைகளுக்கு ‘கதை சொல்லும் நேரம்’ என்ற நிகழ்வு சனி, ஞாயிற்றுகிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் சொல்லி தரப்படுகிறது. நீதி போதனை கதைகள் எடுத்து சொல்லப்படுகிறது. குழந்தைகளே கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ‘படித்ததில் பிடித்தது’ என்ற தலைப்பில் சிறுவர்கள் பேசுகிறார்கள். குழந்தைகள் பிரிவு மிகவும் சிறப்பாக குழந்தைகளை ஈர்க்கும் வகையில் சேர்கள் போடப்பட்டு மிக அருமையாக உள்ளது.

வேலைவாய்ப்பு பெறும் வகையில் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ‘Tally’யும் சொல்லி தரப்படுகிறது. இங்கு மொத்தம் 33 கம்ப்யூட்டர்கள் உள்ளன. 10–ம் வகுப்பு வரை படித்தவர்கள், இல்லத்தரசிகள் பலர் ஆர்வமுடன் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி பெறுகிறார்கள்.

பயிற்சிக்குப் பின் ஏராளமானனோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

நூலக பிரிவுகள்

1. பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவு, 2. நாளிதழ், பருவ இதழ்கள் பிரிவு, 3. மகளிர் பிரிவு, 4. நூல் வழங்கும் பிரிவு, 5. சிறுவர் பிரிவு, 6. குடிமைப்பணி பயிற்சி மைய பிரிவு, 7. இணையதளம், 8. நகலக பிரிவு, 9. சொந்த நூல்கள் படிப்பகம், 10. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சிறப்பு பிரிவு (தமிழகத்திலேயே முதல் முறையாக) என 10 பிரிவுகள் உள்ளன.

நூலக சிறப்புகள்


நூல்களின் எண்ணிக்கை – 62,493. நூலக உறுப்பினர்கள் 22,130 (தமிழகத்திலேயே முதலிடம்), கொடையாளர்கள் – 109, பெரும் புரவலர்கள் – 58, புரவலர்கள் – 199, ஆக புரவலர் வைப்புத் தொகை ரூ.15 லட்சத்து 79 ஆயிரம். (தமிழகத்திலேயே முதலிடம்)நாள் ஒன்றுக்கு வாசகர் வருகை – 1,250. நூல் இரவல் – 500, நூல் கலந்தறிதல் – 550, மொத்தம் – 2300.

கணினி நூலக சிறப்புகள்

கணினி நூலகத்தின் மூலம் தற்போது வரை 352 எளிய மாணவ மாணவியருக்கு 3 மாத கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி எச்.சி.எல். அறக்கட்டளை மற்றும் திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டத்தால் வழங்கப்பட்டு வேலைவாய்ப் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

20 மகளிருக்கு டேலி பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 740 மகளிருக்கு 10 மணி நேர கணினி கல்வி கற்றுத் தரப்பட்டுள்ளது. 2500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் மூலம் 200 பேருக்கு ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 12 லேத் தொழிலாளர்களுக்கு சி.என்.சி. எந்திர பயிற்சி கணினி வாயிலாக நம் நூரலகத்திலும், நேரடி எந்திர பயிற்சி அசோக் லேலண்டு தொழிலகத்திலும் கற்றுத் தரப்படுகிறது.

தமிழக அரசு விருதுகள்


2013, 2014 ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக புரவலர்கள் சேர்த்ததற்கான விருது 2015 ஆண்டில் தமிழகத்திலேயே அதிக நன்கொடை பொருட்களை பெற்றதற்கான விருது, 2014, 1016 & 2017 ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்ததற்கான விருது என விருதுகள் குவித்துள்ளது.

திருவொற்றியூர் கிளை நூலகத்தில் நடைபெறும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகள் ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடையும் இலக்குகளாக அறியப்பட்டு அதற்கான விருது நூலகம் பெற்றுள்ளது.

கம்ப்யூட்டர் துறையில் நிபுணத்துவம் பெற்று டெல்லியில் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திய எம்.கணேசன் இங்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு பயிற்சி அளித்து வருகிறார்.

No comments:

Post a Comment