FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 8, 2018

வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண் கர்ப்பம்: முதியவர் மீது போலீசில் புகார்


08.10.2018
நாமக்கல்: மாற்றுத்திறனாளி பெண், கர்ப்பத்துக்கு காரணமாக வயதானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தாயார் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நாமக்கல், எம்.ஜி.ஆர்., நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செங்கோட்டையன் - விஜயா தம்பதியினர். அவர்களுக்கு, தனலட்சுமி, 22 என்ற மகள் உள்ளார். அவர், வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுடன், மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனலட்சுமி கர்ப்பிணியானதுடன், பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நேற்று, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், விஜயா, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், தன் மகள் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஒரு வயதானவர்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். பரிசோதனைக்காகவும், பிரசவத்துக்காகவும், தனலட்சுமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment