30.09.2018
சேலம்: சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம், சேலத்தில், நேற்று நடந்தது. மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க பொதுச்செயலர் அருண்குமார் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், திருவள்ளுவர் சிலை, செரிரோடு, முள்ளுவாடி கேட் வழியாக, தொன்போஸ்கோ பள்ளியை அடைந்தது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த வாய் பேசாத, காது கேளாத, 120 பேர் பங்கேற்றனர். அருண்குமார் கூறியதாவது: காது கேளாத, வாய் பேசாதோர் காட்டும் சைகையும் ஒரு மொழியே. அதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் அத்தகைய மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைக்கவே, விழிப்புணர்வு ஊர்வலம். அதற்கான, அங்கீகாரம் பெற, அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சங்கத்தில் இணைவோருக்கு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவி செய்யப்படும். அதற்கு, 95006 48712 என்ற மொபைலில், வீடியோ காலில், சைகை மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment