31.10.2018
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை கைது செய்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் 17 பேர் மீதும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 17 பேரும் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக ேநற்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி 17 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 3 பேர் தங்களுக்கென வக்கீல்களை நியமித்துள்ளனர். மற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment