FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, October 9, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்த ஊரகவளர்ச்சித்துறை புதிய உத்தரவு! பேச்சுவார்த்தை வெற்றி! போராட்டம் ஒத்திவைப்பு!

09.10.2018
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டாயம் வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட பணிகள் வழங்கவும், 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கவும் நூறு நாள் வேலை சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதற்காக 2012 ஆம் ஆண்டு அரசாணை எண்.52 அமலில் உள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது காரணங்களைச் சொல்லி வேலை வழங்க மறுக்கப்படுகின்றன. பல இடையூறுகளுக்கு மத்தியில் இத்திட்த்தில் வேலைக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை, சட்ட விதிகளுக்குப் புறம்பாக, 8 மணி நேரம் பணி செய்ய வற்புறுத்துவது, கடினமான பணிகளை செய்ய வற்புறுத்துவது, முழு ஊதியம் வழங்க மறுப்பது, மாற்றுத்திறனாளிகள் மனது புண்படும்படி அவமானப்படுத்திப் பேசுவது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் நடைபெறுகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சட்டப்படியாக இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகளை உத்தரவாதப்படுத்தக் கோரியும், அக்-9 அன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை சென்னை சைதாப்பேட்டையில் ஊரகவளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்திருந்தது.

இப்போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் அக்-8 திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே என ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான 4 மணி நேர வேலை, முழு ஊதியம் வழங்கவும், தவறு செய்யும் அலுவலர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்தும் வகையிலும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கலையும் வகையிலும் புதிய உத்தரவு/ சுற்றறிக்கை ஒன்றை ஊரகவளர்ச்சித்துறை மாநில இயக்குனர் அக்-8 மாலை மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தியும், அவர்களுக்கென இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகளை விவரித்தும், தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர்கள் ஜி.முத்துமீனாள், ஆர். ராஜஸ்ரீ ஆகியோர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில நிர்வார்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் மாநில செயலாளர் டி.வில்சன், மாநில துணைத்தலைவர் பி. பாரதி அண்ணா மாநில துணை செயலாளர்கள் கே.பி.பாபு, எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதை தொடர்ந்து அக்-9 நடைபெறவிருந்து மாநில அளவிலான காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment