FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 24, 2018

2 நிமிட விழிப்புணர்வுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு: கொளுத்திய வெயிலில் விழி பிதுங்கிய காது கேட்காத, வாய் பேச முடியாத 'சிறப்பு' குழந்தைகள்

23.10.2018
ஈரோடு: இரண்டு நிமிட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, காது கேட்காத, வாய் பேச முடியாத, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஈரோடு அரசு காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 60 பேர், பெருந்துறை சிலேட்டர் புரம் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 18 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கலெக்டர் வருவார் என, கூடைப்பந்து மைதானத்தில், ஈரோடு, 100 சதவீதம் ஓட்டு என்ற எழுத்து வடிவில் அமர வைக்கப்பட்டனர். நேரமானதே தவிர, கலெக்டர் வரவில்லை. 9:30 மணிக்கு வெயில் அதிகமானதால், மாணவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர். பிறகு, 9:55 மணிக்கு கலெக்டர் கதிரவன் வந்தார். மாணவர்களை மைதானத்தில் மீண்டும் அமர வைத்து பார்வையிட்டார். இரண்டு நிமிடத்துக்கு பின், வெயில் அதிகமாக இருக்கிறது. மாணவர்களை உடனடியாக அழைத்து செல்லுங்கள் எனக்கூறி விட்டு, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கலெக்டர் சென்றார். இரண்டு நிமிடத்துக்காக, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை பார்த்த பலர் வேதனைப்பட்டனர். அடுத்து வரும் நிகழ்வுகளில், இதுபோன்ற பிறர் சிரமங்களை தவிர்க்க, அரசு அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment